Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனாவுக்கு டபுள் ஷாக்! தந்தையை அடுத்து காதலனுக்கும் உடல்நலக் குறைவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தையை தொடர்ந்து வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்திற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Smriti Mandhanna

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டை போல் மகளிர் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களை சேர்த்தார். அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி வாகை சூடியது.

இந்த கோப்பையை வெல்ல ஸ்மிருதி மந்தனாவும் முக்கிய காரணமாக இருந்தார். இந்த அணிக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இந்த அணியினரை நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்துடன் ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அண்மையில் கூட ஸ்மிருதியை விளையாட்டு மைதானத்தில் வைத்து முச்சல் மோதிரம் அணிவித்திருந்தார்.

இவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முதல் நாள் இருவரும் ஹல்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இருவரும் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தனர். அவர்கள் மீது உறவினர்கள் மஞ்சளை கரைத்து ஊற்றும் சடங்கு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த நாள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்மிருதியின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது இருவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சீனிவாஸ் மந்தனாவின் உடல் சீராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு சீனிவாஸ் உணவு உட்கொள்ளும் போதுதான் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு வைரஸ் தொற்றுக்காகவும் வயிற்றில் ஏற்பட்ட அசிடிட்டி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவத்தால் இருவரது குடும்பத்தினரும் சோகத்தில் உள்ளனராம்.

தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை எல்லாம் சமூகவலைதள பக்கத்தில் இருந்து ஸ்மிருதி நீக்கிவிட்டார். தந்தை மருத்துவமனையில் இருந்தாலும் திருமணம் செய்து வைக்கலாம் என அவரது உறவினர்கள் தெரிவித்த போதும் ஸ்மிருதி மறுத்துவிட்டார். தனது தந்தை வீடு திரும்பியதும்தான் திருமணம் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+