சில எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆதரித்தன - துணை ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் ஆல்வா பகிரங்க புகார்
டெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் சில எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆதரித்ததாக எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

வேட்பாளர்கள்
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஜெகதீப் தன்கர் வெற்றி
அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மார்க்கரெட் ஆல்வா கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா, "புதிய துணை குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தன்கருக்கு வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி. இந்த தேர்தல் எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்றவும், நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்
ஆனால், சில எதிர்கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜகவை ஆதரித்தன. இதன் மூலம் இதுபோன்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தங்களின் நம்பகத்தன்மையை சிதைத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். தேர்தல் முடிந்துவிட்டது. நமது அரசியலமைப்பை பாதுகாப்பதற்காகவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும், நாடாளுமன்றத்தில் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடக்கும் போராட்டம் தொடரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications