முகம் நிறைய புன்னகை! கவலைகளை மறந்த சோனியா! பெண்களுடன் நடனமாடி மகிழ்ச்சி! பிரியங்காவும் வேறலெவல்
டெல்லி: டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஹரியானா பெண் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி விருந்து வழங்கிய நிலையில் சிரித்த முகத்துடன் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியுடன் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக கடந்த ஓராண்டாக ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பல்வேறு தரப்பு மக்களிடம் கலந்துரையாடினார்.
அதன்பிறகு சமீபத்தில் அவர் லாரியில் பயணம் செய்து டிரைவர், கிளீனர்களின் பிரச்சனைகளை கேட்டார். அதன்பிறகு ஹரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடவு செய்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதற்கிடையே இந்த மாதம் துவக்கத்தில் அப்போது ஹரியானா மாநிலம் சோனிபேட் அருகே பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடி ராகுல் காந்தி நாற்று நடவு செய்தார்.
இத்தகைய சூழலில் பெண் விவசாயிகளை ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி ராகுல் காந்தி சோனிபேட் பெண் விவசாயிகளை வேன் மூலம் டெல்லிக்கு அழைத்து வந்து விருந்து வழங்கினார். இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியும் பங்கேற்றனர். அவர்கள் பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடியபடியே உணவு சாப்பிட்டனர்.
விருந்துக்கு வந்த பெண்களின் குழந்தைகளுக்கு ராகுல் காந்தி சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார். அதோடு உழவு, விதை, உணவு பொருட்களின் விலை, ஜிஎஸ்டி தாக்கம், பணிக்கு கிடைக்கும் கூலிகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். மேலும் விவசாய பயிர்கள், பருவகாலம் குறித்த அம்சங்களை கேட்டறிந்து கொண்டனர்.
அதன்பிறகு வீட்டு வளாகத்தில் பெண் விவசாயிகள் பாடல்பாடியும், பாடல்களை ஒலிபரப்பு செய்தும் அதற்கேற்ப நடனமாடினர். அப்போது சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பெண் விவசாயிகளுடன் சேர்ந்து சிரித்தபடி நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சோனியா காந்தி சமீபத்தில் அடிக்கடி உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை முடித்து விமானத்தில் சோனியா காந்தி பயணித்தார். அப்போது திடீரென விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க்குடன் இருந்தார். இதுதொடர்பான போட்டோவை ராகுல் காந்தி வெளியிட்டு இருந்தார். இது கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த நிலையில் தற்போது சோனியா காந்தி உற்சாகமாக நடனமாடும் வீடியோ காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications