டெல்லியில் விஜய்க்கு கிடைத்த முக்கியத்துவம்! சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் நடந்ததை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் ராகுல் காந்திக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டிகே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். டிகே சிவக்குமார் உள்ளிட்டோருக்கு இரண்டாம் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதை நூலாக எழுதியுள்ளார். belonging a journey of love என்ற பெயரில் சோனியா காந்தி எழுதிய நூலில் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

Sonia Gandhi book launch in Delhi TN CM Vijay given a seat in the front row

இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றார். விஜய்யுடன் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர். ஐடிசி ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ராகுல் காந்தி அருகிலேயே விஜய் அமர்ந்து இருந்தார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான டிகே சிவக்குமார், ரேவந்த் ரெட்டி, விடி சதீஷன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய், முதல் வரிசையில் அமர்ந்து இருந்தது கவனம் பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+