டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்று.. பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி அவசர கடிதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Recommended Video

    Black Fungus யாரை தாக்கும்? Mucormycosis பற்றி விவரிக்கிறார் Dr. Boopathy John

    இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3,00,00-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    கொரோனா வைரஸே மக்களை பாடாய் படுத்தி நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கருப்பு பூஞ்சை தொற்று

    கருப்பு பூஞ்சை தொற்று

    கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே கருப்பு பூஞ்சை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளன. தமிழகத்திலும் இந்த னாய் வேகமாக பரவி வருகிறது.தமிழக அரசு பொது சுகாதார சட்டத்தின் கீழ் இந்த நோயை அறிவித்துள்ளது. இது பல்வேறு மாநிலத்திலும் இந்த நோய் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    மருந்து அறிவிப்பு

    மருந்து அறிவிப்பு

    கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்த்துள்ளது. ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த மருந்து உற்பத்திக்கு மேலும் ஐந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை முதல் மாதத்திற்குள் 1,11,000 குப்பிகளை உற்பத்தி செய்யத் தொடங்குவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சோனியா காந்தி கடிதம்

    சோனியா காந்தி கடிதம்

    இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ' கருப்பு பூஞ்சை தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்றை குணப்படுத்தும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இலவச சிகிச்சை

    இலவச சிகிச்சை

    எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

    English summary
    Congress leader Sonia Gandhi has written a letter to Prime Minister Narendra Modi asking him to provide free treatment to people affected by the black fungus epidemic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X