களத்தில் சோனியா.. அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு..! ஒன்றுகூடும் காங்கிரஸ் தலைவர்கள்! என்ன மேட்டர்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸின் வியூகத்தை வகுக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு இன்று சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் வழக்கமாக ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். அதன்படி இந்தாண்டு அடுத்த வாரம் அதாவது ஜூலை 21ம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறும். ஆனால், இந்த முறை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய சட்டங்களை அரசு கொண்டு வர உள்ளது.

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வியூகத்தை வகுக்க அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது. காங்கிரஸின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, சசி தரூர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
முக்கியமான விஷயம் என்ன
இன்று கூடும் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றவியல் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, இது குறித்து முக்கியமாக ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான சேகர் யாதவ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் நோட்டீஸில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும்போது, நீதிபதி சேகர் யாதவ் விஷயத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த உணர்வு எட்டப்பட்ட பிறகு இந்தியா கூட்டணிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டத்தை நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முடிவெடுக்கப்படும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பீகாரில் நடக்கும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையையே முக்கியமான விஷயமாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நடவடிக்கையால் சுமார் இரண்டு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் சொல்வது, இந்த மோதலில் ஏற்பட்ட ராணுவ இழப்புகள், பொருளாதாரம் சூழல், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
-
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள்












Click it and Unblock the Notifications