நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல்... சிதம்பரம் பெயரை தவிர்த்த காங்கிரஸ் தலைமை
டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதேசமயம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பூ ஆகியோரின் பெயர்கள் அந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இருந்தால் அவர்கள் பிரச்சாரத்துக்கான செலவு வேட்பாளர் செலவுத்தொகையில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 8-ம் தேதி
வரும் பிப்ரவரி 8-ம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளன. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற மல்லுகட்டி வருகின்றன.

நட்சத்திரப் பேச்சாளர்
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை அளித்து வருகிறது. அதன்படி காங்கிரஸ் தயாரித்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் குஷ்பு, நக்மா, நாராயணசாமி ஆகியோர்கள் அடங்கிய 40 பேர்கள் உள்ளன.

காங். தலைமை
மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறாதது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது. நக்மாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சிதம்பரத்துக்கு காங்கிரஸ் அளிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

உள்நோக்கம்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி நிர்வாகியும், ப.சி. ஆதரவாளருமாகிய ஒருவரிடம் கேட்ட போது, ப.சி. திஹார் சிறையில் இருந்து வந்ததில் இருந்தே அவர் உடல் சோர்வுடன் காணப்படுகிறார். அதனால் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் காங்கிரஸ் தலைமை பெயரை சேர்க்கவில்லை. மற்றபடி நீங்கள் நினைப்பது போல் உள்நோக்கம் எல்லாம் இல்லை என பதில் கிடைத்தது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி












Click it and Unblock the Notifications