நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை.. நுபுர் சர்மாவுக்கு எதிராக.. தென்கொரியாவில் இஸ்லாமியர்கள் போராட்டம்
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து நுபர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இருந்த நுபுர் சர்மா சில வாரங்களுக்கு முன்பு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
அதில் அவர் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நுபர் சர்மா
இதற்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, பாகிஸ்தான் எனப் பல இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்திற்கு தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து இருந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

பதற்றம்
அதேபோல இந்த விவகாரத்தில் மற்றொரு பாஜக நிர்வாகி நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சில அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து அங்குப் பதற்றமான ஒரு சூழல் உருவானது. அங்கு அமைதி திரும்பவே சில நாட்கள் வரை ஆனது.

பக்ரீத்
இந்தச் சூழலில் இன்று பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நாள்காட்டியில் ஹஜ் மாதம் 10ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளைக் கொண்டாடினர்.

போராட்டம்
இந்தச் சூழலில் நபிகள் நாயகம் மீதான அவதூற்றைக் கண்டித்தும், நுபுர் சர்மாவைக் கைது செய்ய வலியுறுத்தியும் தென்கொரியாவில் பக்ரீத் பெருநாள் தொழுகை முடித்ததுடன் பதாகைகளை ஏந்தி அமைதி போராட்டம் நடத்தினர். இந்தியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications