சுத்தமா மழையே இல்லை..! இந்தியாவை ஏமாற்றும் தென்மேற்கு பருவமழை.. மொத்தம் 5 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுக்க இன்னுமே பருவமழை தீவிரமடைய ஆரம்பிக்கவில்லை என்பதால் விவசாயிகள் தொடங்கி பலரும் கவலையடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் போக 5 காரணங்கள் இருப்பதாகச் சொல்லும் வல்லுநர்கள், இதில் என்ன சிக்கல் நிலவுகிறது.. இது எப்போது சீராகும்.. மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கியமான மழையை தரும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி சரியான நேரத்தில் தொடங்கியது. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அது ஒரு முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்யாமல் தாமதமாவது விவசாயிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Southwest Monsoon Delay Rain weather Indai

இந்தத் தாமதத்திற்கு ஏதோ ஒரு காரணம் மட்டும் அல்ல, பல வானிலை மாற்றங்களின் சிக்கலான கூட்டணியே மழை இதுபோல தாமதம் ஆகக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை எளிமையாகப் பார்ப்போம்.

1. பசிபிக் பெருங்கடலின் குறுக்கீடு

பருவமழை தொடங்கும் போது, இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வங்கக்கடலை நோக்கி நகர வேண்டும். ஆனால், இந்த முறை பசிபிக் பெருங்கடலில் உருவான 'ஜக்மி' என்ற புயல், பருவமழையின் எனர்ஜியை திசைதிருப்பியது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகப் பயன்பட வேண்டிய எனர்ஜி, கிழக்கு நோக்கி பசிபிக் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் பருவமழை மேகங்கள் வலுவிழந்தன.

2. வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்

வழக்கமாகக் கோடைக்காலத்தில் வட இந்தியாவில் வீசும் வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் (Western Disturbances), இந்த முறை ஜூன் மாதத்திலும் நீடித்தன. இவை வடக்கிலிருந்து வறண்ட காற்றைக் கொண்டு வந்தன. பருவமழை மேகங்கள் உருவாவதற்கு ஈரப்பதம் அவசியம். ஆனால், இந்த வறண்ட காற்று மேகங்கள் உருவாவதைத் தடுத்து, மழையை முடக்கியது.

3. காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகாதது

பருவமழை இந்தியா முழுவதும் பரவ வேண்டுமானால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வேண்டும். இதுதான் பருவமழையை நிலப்பகுதியை நோக்கி இழுத்து வரும் 'இன்ஜின்' போலச் செயல்படும். ஆனால், இந்த முறை காற்றின் திசை நேர்க்கோட்டில் இருந்ததால், காற்றால் சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவிய முடியவில்லை. இதனால் மழைக்கான வலுவான சூழல் உருவாகவில்லை.

4. எல் நினோ தாக்கம்

தற்போது உருவாகி வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம், பருவமழைக்குச் சாதகமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. எல் நினோ நேரடியாக மழையை நிறுத்தாது என்றாலும், இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்வதைக் குறைக்கும் தன்மையுடையது.

5. மேடன்-ஜூலியன் ஆஸிலேஷன்

'மேடன்-ஜூலியன் ஆஸிலேஷன்' என்பது பூமத்திய ரேகை பகுதியில் நகரும் ஒரு மேகக் கூட்டம் ஆகும். இது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வரும்போது மழை பொழிவு அதிகரிக்கும். ஆனால், ஜூன் மாதத்தின் முதல் பாதியில் இது இந்தியாவுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தது. இதனால் மேகங்கள் உருவாக முடியாத சூழல் நிலவுகிறது.

ஜூன் தொடக்கத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்தது உண்மைதான். ஆனால், வங்கக்கடலில் ஒரு வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை இல்லாததால், அந்த மழையைத் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. இதனால் மழை மேகங்கள் மீண்டும் தெற்கு நோக்கியே போய்விட்டது

இனி என்ன நடக்கும்?

தற்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. ஜூன் நான்காவது வாரத்தில் மேடன்-ஜூலியன் ஆஸிலேஷன் இந்தியாவுக்குச் சாதகமாக மாறும். கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்க காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கும். இந்த மாற்றங்கள் வறண்ட காற்றை விரட்டியடித்து, இந்தியா முழுவதும் பருவமழை மீண்டும் தீவிரமடைய உதவும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+