தென்மேற்குப் பருவமழை முன் கூட்டியே தொடங்கியது - கேரளாவில் மே 31 முதல் மழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு பருவமழை மாலத்தீவு-குமரி கடற்பகுதியிலும், தென்மேற்கு மற்றும் வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியிலும், வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகள், மத்தியமேற்குப் பகுதிகளில் 27ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
டெல்லி: கேரளாவில் தென் மேற்கு பருவமழை வரும் 31ஆம்தேதியே தொடங்குவதற்கு சூழல் சாதகமாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் மேற்கு பருவமழை மாலத்தீவு-குமரி கடற்பகுதியிலும், தென்மேற்கு மற்றும் வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியிலும், வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகள், மத்தியமேற்குப் பகுதிகளில் 27ஆம் தேதியே தொடங்கிவிட்டதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக்காலமாகும்.
வழக்கமாக மே 20ஆம் தேதி அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி பருவமழை ஆரம்பிக்கும். யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது
இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது தென் மேற்கு பருவமழை மாலத்தீவு-குமரி கடற்பகுதியிலும், தென்மேற்கு மற்றும் வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியிலும், வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகள், மத்தியமேற்குப் பகுதிகளில் 27ஆம் தேதியே தொடங்கிவிட்டது.

இன்னும் இரு தினங்களில் மழை
இதனையடுத்து கேரளாவில் தென் மேற்கு பருவமழை வரும் 31ஆம் தேதியே தொடங்குவதற்கு சூழல் சாதகமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு ஒருநாள் முன்கூட்டியே கேரளாவில் தொடங்குகிறது.

பருவமழை சீராக இருக்கும்
தென்மேற்குப் பருவமழை மூலமாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவிகித வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது. நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும் இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை
வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகள், ஆந்திரா ஆகியவற்றுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications