டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை முன்கூட்டியே பிரக்யா தாகூர் செய்திருந்தால்.. இந்த பிரச்சினை வந்திருக்காது.. ஸ்பைஸ்ஜெட் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் வகுப்பும் இல்லை வசதியும் இல்லை - பாஜக எம்.பி. பிரக்யா

    டெல்லி: பாஜக பெண் எம்பியும் சர்ச்சைக்குரிய பெண் சாமியாருமான பிரக்யா தாகூர் விமானத்தில் பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    ஸ்பைஸ்ஜெட்டுக்கு சொந்தமான பம்பார்டியர் க்யூ 400 என்ற 78 இருக்கைகள் கொண்ட விமானம் டெல்லியிலிருந்து போபாலுக்கு இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் முதல் வரிசை அவசர கால இருக்கை ஆகும். இந்த இருக்கை சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கப்படாது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த விமானத்தில் போபால் செல்ல பிரக்யா தாகூர் முன் பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த முன்வரிசையில் அமர்ந்தார்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததை கண்ட விமான ஊழியர்கள் இது அவசர கால இருக்கை என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதை சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்றனர்.

    மக்கள் பிரதிநிதி

    மக்கள் பிரதிநிதி

    இதற்கு பிரக்யாவோ மறுப்பு தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காரணங்களை கூறி பயணிகளும் அவரை பின் இருக்கைக்கு செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும் அவர் மறுத்துவிட்டார். சக பயணிகளில் ஒருவர் மக்கள் பிரதிநிதியான தாங்களே இது போல் செய்யலாமா என கேட்டார்.

    இறக்க கூறிய பயணிகள்

    இறக்க கூறிய பயணிகள்

    அதற்கு பிரக்யா மசியவில்லை. இதனால் விமானம் புறப்பட தாமதமாவதை உணர்ந்த சக பயணிகள் ஒன்று அவர் தனது இருக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை இறக்கிவிடுங்கள் என தெரிவித்தனர்.

    இருக்கை

    இருக்கை

    அப்போது சக்கர நாற்காலி பயணிகள் முதல் வரிசையில் உட்காரக் கூடாது என்பதற்கான விதிகள் அடங்கிய ஆவணங்களை காண்பிக்குமாறு விமான ஊழியர்களிடம் கேட்டார். அது அவருக்கு காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரக்யா தனது இருக்கையை மாற்றி கொள்ள ஒப்புக் கொண்டு பின் இருக்கைக்கு சென்றார்.

    முன் பதிவு

    முன் பதிவு

    பிரக்யா தாகூரின் பிடிவாதத்தால் விமானம் 45 நிமிடங்கள் தாமதமானது. இதுகுறித்து ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் முதல் வரிசை எப்போதும் சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. தான் சக்கர நாற்காலியுடன் பயணிப்பேன் என்பதை பிரக்யா முன்பதிவு செய்யும் போது தெரிவிக்கவில்லை.

    குழப்பங்களுக்கு காரணம்

    குழப்பங்களுக்கு காரணம்

    இதனால் இவர் சக்கரநாற்காலி பயணி என்பது விமான ஊழியர்களுக்கு தெரியவில்லை. அவர் முன்பதிவு செய்த போதே இதை தெரிவித்திருந்தால் அவருக்கு முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருக்காது. அவர் குறிப்பிடாததுதான் இந்த பிரச்சினைகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என கூறியுள்ளது.

    English summary
    Spicejet explains Bhopal MP Pragya Thakur for a emergency seat in the flight as she never said that she was a wheel chair passenger while booking ticket.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X