பரபரப்பு! டெல்லி ஏர்போர்டில் மின் கம்பத்தில் மோதிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் சிறிய விபத்தில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று டெல்லி சர்வதேச விமான நிலையம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான பயணிகளைக் கையாளும் விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் உள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்று இந்த விமான நிலையத்தில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.

விபத்து
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இன்று வழக்கம் போல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்படத் தயாரானது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட ஆயத்தமானது. அப்போது ஓடுதளத்திற்கு புஷ்பேக் செய்யும் போது, திடீரென அந்த விமானம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

என்ன நடந்தது
இந்தச் சம்பவம் நடந்தபோது அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்படத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் முனையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதைக்குச் செல்லும்போது மின்கம்பத்தில் அந்த விமானம் மோதியுள்ளது. இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் அதில் புறப்பட்டுச் சென்றனர்.

விளக்கம்
இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இன்று டெல்லியில் இருந்து ஜம்முவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 160 புறப்படத் தயாராக இருந்தது. விமானம் புஷ் பேக் செய்யும்போது, விமானத்தின் வலதுபுற இறக்கை பின்னால் இருந்து மின்கம்பத்தில் லேசாக மோதியது. இந்த சம்பவத்தில் விமானத்தின் அய்லிரான் சேதமடைந்தது" என்று தெரிவித்தார்.

பாதிப்பு இல்லை
இதைத் தவிர விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல விமானத்திற்கும் மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மாற்று விமானம் மூலம் அவர்கள் ஜம்மு புறப்பட்டுச் சென்றனர். பயணிகள் யாரும் காயமடையவில்லை என்ற போதிலும், இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications