சீனாவின் ‘பொறியில்’ சிக்கிய இலங்கை! என்னவாகும் ராஜபக்சவின் எதிர்காலம்! இந்தியா போடும் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் கடன்களை வழங்கி வரும் நிலையில், சீனாவிடம் இருந்து இலங்கையை விடுவித்து அமெரிக்காவின் பக்கம் நகர்த்துவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended Video

    மோசமான நிலையில் Srilanka-வின் பொருளாதாரம்.. என்னவாகும் ராஜபக்சவின் எதிர்காலம் ?

    ஏப்ரல் 12 அன்று, இலங்கை எண்ணெய் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்கான 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனுக்கான அனைத்து தவணைகளையும் செலுத்தத் தவறியதாக அறிவித்தது.

    நாட்டில் நிலவும் அபாயகரமான உணவுப் பஞ்சம், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களை அணிதிரட்டியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி பொது அவசரநிலையை விதிக்க அவர் எடுத்த முடிவு எதிர்ப்புகளை மேலும் தீவிரப்படுத்தியது.

    இலங்கை விவகாரம்

    இலங்கை விவகாரம்

    நான்கு நாட்களுக்குப் பிறகு அது விரைவாக திரும்பப் பெறப்பட்ட அதே நாளில், முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தது. இதுவரை, இலங்கை நாடாளுமன்றத்தின் 42 உறுப்பினர்கள், ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட ஆளும் கூட்டணியில் இருந்து தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இது இலங்கை அரசு பெரும்பான்மையை இழக்க வழிவகை செய்தது.

    அரசியல் எதிர்காலம்

    அரசியல் எதிர்காலம்

    சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை அறிவித்ததுடன், 20ஆவது திருத்தத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவதற்கான மசோதாவையும் கொண்டுவந்துள்ளது. இதேவேளை, கோட்டாபயவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையையும் கட்சி ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் ராஜபக்ச சகோதரர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    அதிகரிக்கும் கடன்

    அதிகரிக்கும் கடன்

    இந்நிலையில் இலங்கைக்கு தற்போது 57 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உள்ளது. இதில் சுமார் 35 பில்லியன் டாலர் வரை கடன்களை திரும்ப செலுத்துவதை தள்ளி வைத்திருக்கிறது இலங்கை அரசு. இந்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் இலங்கையில் அமெரிக்க டாலர் கையிருப்பு 1.93 பில்லியனாக உள்ளது. அடுத்த வாரம் 78 மில்லியன் டாலர் கடன் தவணை செலுத்துவதற்கு கொண்டு இருக்கும் நிலையில் இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடனை செலுத்தாவிட்டால் புதிய கடன்கள் வாங்குவது நிறுத்தப்படும் அதோடு கூடுதல் வட்டி செலுத்த வேண்டும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

    இலங்கையின் பொருளாதாரம்

    இலங்கையின் பொருளாதாரம்

    இதனால் நாட்டில் தற்போது இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது இதனால் அந்நாட்டின் பங்கு துறை திவால் அடைவதோடு பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களை வழங்கி வருகின்றன. ஜப்பான் அதிகமாக கடன் வழங்கி இருக்கும் நிலையில் வங்கதேச நாட்டிலிருந்து கூட இலங்கை கடன் பெற்றிருக்கிறது. குறிப்பாக சீனாவிடம் கடன் பெற்று தவறான பொருளாதார கொள்கைகளால் தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படும் நிலையில் மீண்டும் சீனா இந்தியாவிடம் இலங்கை கடன் பெற்று வருகிறது.

    இந்தியாவின் நிபந்தனைகள்

    இந்தியாவின் நிபந்தனைகள்

    இதன் காரணமாக இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விரிகின்ற நிபந்தனைகளையும் ஒருசேர நிறைவேற்ற வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விசயத்தில், ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளரான சீனா, தனது முன்னாள் கூட்டாளிகளை காப்பாற்ற முனைப்பாக உள்ளது. மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியவுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால், சீனா ஆரம்பத்தில் 1 பில்லியன் டாலர் கடனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, அது $1.5 பில்லியனை நாணய மாற்று ஒப்பந்தத்திலும் வழங்கியது.

    இந்தியாவின் ஆதரவு

    இந்தியாவின் ஆதரவு

    இந்நிலையில் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியின் போது, ​​இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு மிகப்பெரிய அளவிலான நன்மதிப்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 11,000 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பும் இந்தியாவின் முடிவு சரியான படியாகும். ஆனால், இலங்கை மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி, ராஜபக்சே குடும்பத்தின் ஆதரவாக மாறிவிடக் கூடாது. மக்கள் அங்கீகாரத்தை இழந்த நிலையில், அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, இந்தியா அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், அது இலங்கையில் சாமானியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை நீடிக்கவே செய்யும்.

    அரசின் இன்றியமையாத பங்கு

    அரசின் இன்றியமையாத பங்கு

    நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும். இது சம்பந்தமாக, இலங்கையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராஜபக்சே சகோதரர்களின் நம்பிக்கையின் பின்னணியில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். எனினும், நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளை தமிழ்நாட்டில் தங்க வைக்க வேண்டியிருக்கும். இது இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தியா இன்றியமையாத பங்கை வகிப்பதை விவேகமானதாக ஆக்குகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+