இலங்கை தேர்தல்: யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை தந்த அதிர்ச்சி முடிவுகள்- சிங்களர் "மகிழ்ச்சி"!
டெல்லி: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கை தேர்தலில் அதிகமான வாக்குகளை சிங்களப் பேரினவாத ஜேவிபி உள்ளிட்ட 21 கட்சிகளின் கூட்டணியான இந்த தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் மிகப் பெரிய வரலாறு காணாத அரசியல் தோல்வியை பெற்றுள்ளனர்.
தென்னிலங்கையில் சிங்களரே பெரும்பான்மையினர்; வடகிழக்கு இலங்கையில் தமிழரே பெரும்பான்மையினர். இலங்கையின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் தென்னிலங்கையின் முடிவும் வடகிழக்கு இலங்கையின் முடிவும் வெவ்வேறானதாகவே இருந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தென்னிலங்கை சிங்களர் அனுர குமார திசநாயக்கவுக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவு அளித்திருந்தனர்.

தமிழ் கட்சிகளுக்கு அதிர்ச்சி: ஆனால் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு ஈழத் தமிழரும் சிங்களப் பேரினவாத ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் கட்சிக்கே பேராதரவைத் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் கட்சிகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் தமிழர் தரப்பில் ஏராளமான அரசியல் கட்சிகள், கூட்டணிகள் களம் கண்டன. இதனால் ஒட்டுமொத்தமாக தமிழர் தரப்பின் வாக்குகள் சிதறிப் போயின. அரசியலுக்காக அடித்துக் கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளால் எந்த ஒரு பயனுமே இல்லை என முடிவு செய்தோ என்னவோ ஈழத் தமிழர்களில் பெரும்பகுதியினர் சிங்களர் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றார். இதன் வேட்பாளர்கள் தமிழராக இருந்தாலும் வெற்றி என்பது சிங்களர் கட்சிக்குதான் என்பதை மறைப்பதற்கு இல்லை.
தேர்தல் முடிவுகள் என்ன?: ஈழத் தமிழர் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 3 இடங்களில் வென்றது; இலங்கை தமிழரசு கட்சி- 1; அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-1;சுயேட்சை குழு (17)- 1
வன்னி மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் 2-ல் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1; ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1, இலங்கை தொழிலாளர் கட்சி 1-ல் வென்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3; தேசிய மக்கள் சக்தி 1; இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தில் வென்றுள்ளன.
அம்பாறையை உள்ளடக்கிய திகாடுமெல்ல இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2; ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன.
மன்னார், வவுனியாவை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2; ஐக்கிய மக்கள் சக்தி 1; இலங்கை தமிழரசுக் கட்சி 1, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1; இலங்கை தொழிலாளர் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளன.
என்ன பாடம்?: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆணித்தரமாக அளித்திருக்கும் ஒற்றைப் பாடம் என்பது அனைத்து ஈழத் தமிழர் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒரு கூட்டமைப்பாக தேர்தல்களை எதிர்கொள்வதும் பிரச்சனைகளில் ஒன்றுபடுவதும்தான் என்பதாகும். இதனைத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இயங்கிய காலங்களில் வலியுறுத்தப்பட்டது. அப்போது தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குதான் பேராதரவை தந்தனர். இதனால் ஈழத் தமிழரின் அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பின் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் போய் இப்போது தமிழர் வாக்குகள் அனைத்தும் சிங்களருக்கே என்கிற அவல நிலை உருவாகிவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: ஈழத் தமிழர் தங்களது அரசியல் தீர்வுகளை, உரிமைகளை வென்றெடுக்க தற்போதைய நிலையில் வலிமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் அவசியம் என்பதையே இந்த நாடாளுமன்றத் தேர்தல் தெள்ளத் தெளிவாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. இதனை உள்வாங்கியபடியே ஈழத் தமிழரது அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இதற்கான நெருக்கடியை இப்போது தருவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கமும் இல்லை.. வலிமையான உலகத் தமிழர் அரசியல் சக்தியும் இல்லை என்பது துயரமான வரலாறுதான்- தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஈழத் தமிழர் தரப்பின் முதன்மையான பணியாகவும் இருக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications