ஸ்ரீநகர் ஏர்போர்ட்டை குறி வைத்த பாக். டிரோன்களை இடைமறித்து துவம்சம் செய்த இந்திய ராணுவம்!
ஸ்ரீநகர்: எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறி வைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த டிரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலைய வளாகத்திற்கு அருகில் கண்காணிப்பு அமைப்புகள் சந்தேகத்திற்கிடமான வான்வழி நடவடிக்கைகளைக் கண்டறிந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எந்தவொரு ஆபத்தையும் முறியடிக்க வான்வழி அச்சுறுத்தல்களுகு எதிரகா அதிரடி நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்பட்டன.
இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை/ மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
நேற்று இரவு ஜம்மு விமான நிலையத்தில் இதேபோன்ற ட்ரோன் ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டது. இந்திய ராணுவம் அதனை வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில், அடுத்த நாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் செக்டார்களில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் முயற்சிகள், குறிப்பாக முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனினும், நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் உள்ள முக்கியமான இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு நெறிமுறைகளை அதிகரித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications