சூதானமா இருந்துக்கங்க.. திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
Recommended Video
டெல்லி: டெல்லியில், திமுக எம்பிக்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளாராம். சிக்க வைக்க பல வழிகளிலும் பாஜக முயலலாம் என்பதால் இந்த கண்டிப்பான உத்தரவாம்.
திமுக சார்பில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றுள்ள எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பல ஆலோசனைகளையும், அட்வைஸ்களையும் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போதும், தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசியது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த விரும்பத்தகாத பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அறிமுகம் இல்லா நபர்களிடம், குறிப்பாக டெல்லிவாலாக்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும் என திமுக எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளார்.
அதை செய்து தருகிறேன், இதை செய்து தருகிறேன் என யார் வந்தாலும் அண்ட விடாதீர்’ என கறாராக கூறிவிட்டாராம் ஸ்டாலின். இதையும் மீறி புதிய எம்.பி.க்கள் ஆர்வக்கோளாறில் செயல்பட்டு டெல்லிவாலாக்கள் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டால், ரியாக்ஷன் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பாக விசாரித்ததில், ஸ்பை கேமரா மூலம் எதையாவது படம் பிடித்து திமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அசைன்மெண்டில் வடநாட்டு ஏஜென்ஸிக்கள் இறங்கக்கூடும் என தகவல் கிடைத்ததால் தான், எம்.பி.க்களுக்கு இந்த உஷார் அட்வைஸ் என அறிவாலய வட்டாரத்திலிருந்து பதில் கிடைத்தது.
உண்மையில் அரசியல்வாதிகளை காலி செய்ய இதுபோன்ற உத்திகள் கடைப்பிடிக்கப்படுவது ரொம் பழைய பார்முலாதான். ஆனால் இன்று வரை எபக்டிவ் ஆக இருக்கிறது. தமிழகத்திலும் கூட சில முக்கிய அரசியல்வாதிகளை இப்படித்தான் பொறி வைத்து பிடித்து காலி செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு.
சில முக்கியத் தலைவர்களை காலி செய்ய சினிமா நடிகைகளைப் பயன்படுத்தினார்கள் என்று கூட தகவல்கள் உண்டு. அது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு சம்பந்தப்பட்ட ஆக்ரோஷ தலைவர்கள் பின்னாளில் அமைதியாகிப் போய் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications