சோனியா காந்திக்கு 72 ஆவது பிறந்த நாள்.. நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
டெல்லி : டெல்லியில் சோனியா காந்தியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவருக்கு தமது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதே போன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி நடைபெறும் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
சந்திப்பில் ஸ்டாலினுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications