Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரைவர் இல்லாமல் ஓடும் பொலிரோ கார்.. வியந்து போன ஆனந்த மகிந்திரா.. கொடுத்த ரியாக்‌ஷன் அல்டிமேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகிந்திரா நிறுவனத்தின் பொலிரோ காரை, டிரைவர் இன்றி ஓடும் தானியங்கி வாகனமாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று மாற்றியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில், ஆனந்த் மகிந்திரா கொடுத்த ரியாக்‌ஷன் வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

ஆனந்த் மகிந்திரா நிறுவனம் வாகன உற்பத்தியிலும் சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் வாகன சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்து இருக்கும் மகிந்திரா நிறுவனம் பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், மகிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் கார்கள் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் காண முடியும்.

Start up company converts Mahindra Bolero into an automatic car Anand Mahindra Reaction

சாலையில் ஒரு ஐந்து நிமிடம் நின்றால் போதும்.. எப்படியும் ஒரு பொலிரோ காரை பார்த்துவிட முடியும் என்ற அளவுக்கு இந்தியாவில் இந்த கார் மாடல் பிரபலம்.. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. டிரைவர் இன்றி ஆட்டோ மோடில் ஓடும் பொலிரோ காரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.. ஆம் இது உண்மைதாங்க..

டிரைவர் இன்றி இயங்கும் பொலிரோ கார்: இந்த வசதி எப்படி பொலிரோ காரில் சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். மேலும், மஹிந்திரா நிறுவனம் அப்டேட் வாயிலாக இந்த அம்சத்தை பொலிரோவில் வழங்கி இருக்கின்றதோ என்றுகூட நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. போபாலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த வசதியை பொலிரோ காரில் ஏற்படுத்தியுள்ளது.

Start up company converts Mahindra Bolero into an automatic car Anand Mahindra Reaction

சோதனை முயற்சியாக போபால் நிறுவனம் பொலிரோ காரில் தானியங்கி வசதியுடன் பரிசோதித்து பார்த்துள்ளது. இது தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், டிரைவர் இன்றி இயங்கும் பொலிரோ கார்.. மிக நேர்த்தியாக சென்று கொண்டு இருக்கிறது. எதிரில் வாகனங்கள் வந்தால் மிகச்சரியாக வழிவிட்டு ஒதுங்கி செல்கிறது.

நான் பாராட்டுகிறேன்: சாலை விதிகளை பக்காவாக கடைப்பிடித்து கார் தானாகவே ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆனந்த் மகிந்திரா கண்ணிலும் பட்டது. தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா வியப்புடன் கூறியிருப்பதாவது: -

இந்தியா முழுவதும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் வளர்ந்து வருவதற்கான சான்றுதான் இது. இதை நான் பாராட்டுகிறேன். நிச்சயமாக அவரது கார் தேர்வு குறித்து விவாதிக்க போவது இல்லை" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியொ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான்: தானியங்கி கார்களை பொறுத்தவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் தற்போது ஆட்டோ பைலட் கார்களை தயாரிக்க ஆர்வம் கட்டி வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Start up company converts Mahindra Bolero into an automatic car Anand Mahindra Reaction

ஆட்டோமெட்டிக் கார்களில் பல கேமரா, சென்சார், ரேடார் வசதிகள் பொருத்தப்பட்டிருப்பதால் தானாகவே நேவிகேஷன் உதவியுடன் பயணிக்கும். இந்த கார்களில் ADAS (Advanced Driver Assistance System) வசதிகள் இருப்பதால் சிறந்த பாதுகாப்பு அளிக்கும். எனினும் ஆட்டோமெட்டிக் கார்களால் டிரைவர்கள் பெருமளவு வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்கிறது ஆய்வு. இதனால், இந்த கார்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+