தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சரியானது- அரசியல் சாசன பாதுகாப்பு பெற்றது: உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரிக்கபட உள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நாகேஸ்வர ராவ், அசோக் பூஷண், அப்துல் நசீர், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் பெஞ்ச் முன்பாக மராத்தா இடஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்திரா சஹானி அல்லது மண்டல் வழக்கில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீடு வரம்பைத்தான் கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதனை மாற்றி அமைக்க வேண்டுமா? என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இன்றைய விவாதத்தின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீடு வரம்பை மீறலாம். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இது சரியானது. இந்த 69% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பையும் பெற்றுள்ளது என குறிப்பிட்டனர்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications