திருவனந்தபுரத்தில் சிக்கிய F-35! என்ன லாக்ஹீட் மார்ட்டின் இதெல்லாம்? நம்பி வாங்க முடியுமா!
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிரபல 5ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையிறங்கியது. ஏறத்தாழ இரண்டு வாரங்கள் ஆகியும் இந்த விமானம் இன்னும் சரி செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு இந்த விமானத்தை விற்கும் முனைப்பில் டிரம்ப் இருந்த நிலையில், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் 'தேமே என' விமானம் நின்றிருப்பது அதன் தயாரிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலக நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நோக்கி சென்றுவிட்டன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை வெற்றிகரமாக இந்த விமானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றன. சீனா உதவியோடு பாகிஸ்தான் கூட இந்த விமான தயாரிப்பில் இறங்கிவிட்டது. ஆனால் இந்தியாவிடம் இந்த விமானம் இல்லை. எனவே இந்தியாவுக்கு F-35 விற்க அமெரிக்கா முன் வந்தது. இந்தியா இந்த ஆஃபரை பரிசீலித்து வந்த நிலையில், மேற்குறிப்பிட்ட சம்பவம், ஆஃபர் பரிசீலனையை தள்ளி போட வைத்திருக்கிறது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்
ஐந்தாம் தலைமுறை போர் விமானம், நான்காம் மற்றும் 4.5 தலைமுறை விமானங்களை (ரபேல்) விட மேம்பட்டது. இந்த விமானம், எதிரிகளின் கண்களுக்கு தெரியாத திறன் மற்றும் அதிவேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், இது மறைக்கும் பூச்சுக்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் சென்சார்கள், ஒருங்கிணைந்த விமான மின்னணுவியல் மற்றும் 'சூப்பர் க்ரூஸ்' எனப்படும் ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் பறக்கும் திறனையும் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் Su-57 5ம் தலைமுறை விமானம் நம்பகமானதாக கருதப்படவில்லை. சீனாவிடமிருந்து நம்மால் 5ம் தலைமுறை விமானங்களை வாங்க முடியாது. இந்த பின்னணியில், எஃப்-35 ரக போர் விமானம் ஒரு கவர்ச்சிகரமான ஆஃபராக தெரிந்தது. ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். ஒரு விமானத்தின் விலை 80 மில்லியன் டாலர் முதல் 110 மில்லியன் டாலர் வரை இருக்கும். இதுவே, மிக அதிக விலை கொண்ட போர் விமானமாகும்.
விலையை ஒருபுறம் வைத்தாலும், திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய எஃப்-35பி விமானம், எஃப்-35 ரக விமானத்தின் நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எஃப்-35 ரக விமானத்தில் எஃப்-35ஏ, எஃப்-35பி மற்றும் எஃப்-35சி என மூன்று வகைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான எஞ்சின் தன்மையை கொண்டிருந்தாலும், புறப்படும் மற்றும் தரையிறங்கும் முறையில் வேறுபடுகின்றன. திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய எஃப்-35பி ரக விமானம், குறுகிய தூரத்தில் புறப்படும் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டது. அதாவது, இது ஒரு கல்லை தூக்கி போட்டால் எப்படி செங்குத்தாக கீழே வருகிறதோ, அதே போல விமானம் தாங்கி கப்பலில் F-35 பி இறங்க முடியும். மற்ற இரண்டு ரக விமானங்களும் வழக்கமான முறையில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன்களைக் கொண்டவை.
என்னதான் பல சிறப்பம்சங்களை இந்த விமானம் கொண்டிருந்தாலும், இது நம்பகமான விமானம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதாவது, மூன்று விமானங்களுமே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பழுதடைந்திருக்கின்றன. இவை சாதாரண பழுதுகளாக இருக்காது. கை வைத்தால் செலவு அதிகம் இழுக்கும் பழுதுகளாக இருக்கும். இந்த பழுதுகள், விமானத்தை பறக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும். இதில் அடிக்கடி உதிரி பாகங்களை மாற்ற வேண்டி வரும்.
மட்டுமல்லாது உதிரி பாகங்கள் 'ஸ்பெலண்டர்' பைக்குகளுக்கு கிடைப்பதை போல எளிதாக கிடைத்துவிடாது. உதிரி கிடைக்க நாட்கணக்கில் ஆகலாம். சில நேரங்களில் வாரக்கணக்கில் கூட ஆகலாம். இவ்வளவு ஒட்டைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த விமானத்தை நமக்கு விற்க அமெரிக்காவுக்கு மனசு வந்ததோ! இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த விமானத்தை உற்பத்தி செய்த லாக்ஹீட் மார்ட்டினிடம் 'என்ன சிம்ரன் இதெல்லாம்?' என்று கேட்க தோன்றுவதாக பலரும் கூறியுள்ளனர்.
-
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications