இந்தியாவின் இந்த ஒரு பகுதியில் மட்டும் இன்னொரு நாட்டின் சட்டம் செல்லுபடியாகும் தெரியுமா.. சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுவாக எந்தவொரு பகுதியிலும் அது எங்கே அமைந்துள்ளதோ அந்த நாட்டின் சட்டம் தான் செல்லுபடியாகும். அதாவது அங்கே யார் தவறு செய்தாலும் அந்த நாட்டின் சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியில் மட்டும் இரு நாட்டுச் சட்டங்கள் செல்லுபடியாகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

வங்கதேசத்தில் வெடித்த வன்முறையால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பலரும் இந்தியாவுக்குள் நுழைய எல்லையில் முற்றுகையிட்டுள்ளனர்.

India Bangladesh world


இதனால் அங்கே மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கே அமைதியான சூழலை நிலைநிறுத்த இந்தியா தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எல்லைப் பகுதி: ஆனால், இதே இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே எல்லையில் ஒரு பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் சென்று வரலாம். இந்த தனித்துவமான நிலப்பரப்பில் இரு நாடுகளின் சட்டங்களும் பொருந்தும். மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் உள்ள டீன் பிகா காரிடார் தான் இந்த பகுதி.

என்ன காரணம்: கடந்த 1974ம் ஆண்டு இந்த பகுதி வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்பட இருந்தது. இது தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கும் அப்போதையே வங்கதேச பிரதமர் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்த டீன் பிகா பகுதியை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க இருந்தது. அதற்குப் பதிலாக தெற்கு பெருபாரியை இந்தியா பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் வங்கதேச மக்களால் அங்குள்ள தஹர்கிராம்- அங்கர்போட்டா பகுதிகளுக்கு எளிதாகச் சென்று வர முடியும். அதேபோல இந்தியர்களுக்கு பெருபாரி அருகே உள்ள பகுதிகளுக்குச் சென்று வர வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி வங்கதேசம் முதலில் தெற்கு பெருபாரியை இந்தியா வசம் ஒப்படைத்துவிட்டது. அதேநேரம் இந்தியாவால் டீன் பிகா பகுதியை ஒப்படைக்க முடியவில்லை. அரசியலமைப்பு திருத்தம் தேவைப்பட்டதே இதற்குக் காரணமாகும். இதையடுத்து 1992இல் ஒரு சமரசம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி டீன் பிகா காரிடார் வங்கதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

பிரதமர் மோடி லைனுக்கு வந்த முமகது யூனுஸ்! வங்கதேச இந்துக்கள் குறித்து உறுதி! பரபர பின்னணி


ஆவணங்கள் தேவையில்லை: இதனால் வங்கதேச மக்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இந்திய மண்ணுக்குள் நுழைய முடியும். மேலும், எளிதாக மீண்டும் வங்கதேசத்திற்கும் திரும்பலாம். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, இந்த பாதை வழியாகச் செல்லும் வங்கதேச மக்கள் எந்தவொரு சோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

அதேபோல அங்கே குறிப்பிட்ட ஒரு பகுதியில் இரண்டு நாடுகளின் வாகனங்களும் செல்லும்.கிழக்கிலிருந்து மேற்காக வங்கதேசத்திற்கும் வடக்கிலிருந்து தெற்கே இந்தியாவிற்கும் செல்லும் பகுதியில் இரு நாட்டுச் சட்டங்களும் பொருந்தும். அங்கே இந்தியர் விதிமீறல் செய்தால் அவருக்கு இந்தியச் சட்டம் பொருந்தும். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் விதிமீறலில் ஈடுபட்டால் வங்கதேச சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

19 சதுர கிலோமீட்டர்: இந்த பகுதியை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை ஆகிய இரண்டும் சேர்ந்து நிர்வகிக்கின்றன. இரு நாட்டு போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். வங்கதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள இந்த 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியைச் சுற்றிலும் இந்தியா நிலப்பரப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+