கைல ‘தலைமுடி’.. வாயில பஞ்சுமிட்டாய்.. இதுக்குப் பேருதான் வியாபார தந்திரம்!
பஞ்சு மிட்டாய்க்கு காசுக்கு பதில் தலைமுடி பெற்று, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரியைப் பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
டெல்லி: மாற்றி யோசித்தால் எந்தத் தொழிலிலும் நிச்சயம் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பிரதாப் சிங் என்னும் பஞ்சு மிட்டாய் வியாபாரி ஒருவர்.
Recommended Video
வாழ்க்கையாகட்டும், தொழிலாகட்டும் அடுத்தவர் போட்டு வைத்தப் பாதையில் செல்லாமல், தனக்கென தனி பாதை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றியாளர்களாக, தனித்துவமானவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெயர் தெரியாத இந்த பஞ்சு மிட்டாய் வியாபாரி. பழைய முடிக்கு பஞ்சு மிட்டாய் என்ற வித்தியாசமான அணுகுமுறை வியாபாரத்தால் இன்று இணையத்தில் பிரபலமாகி விட்டார் இவர்.

யூடியூப் வீடியோ
ஃபுட்டி விஷால் என்ற யூடியூபரின் வீடியோ மூலம் தான் இந்த வியாபாரியைப் பற்றி தெரிய வந்துள்ளது. பல இடங்களுக்குச் சென்று அங்கு விற்கப்படும் வித்தியாசமான உணவுகளைப் பற்றி வீடியோவாக வெளியிடுபவர் இந்த யூடியூபர் விஷால். சமீபத்தில் இவர் சாலையில் பஞ்சு மிட்டாய் விற்கும் இந்த முதியவரைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வித்தியாசமான வியாபாரி
அதில், சைக்கிள் ஒன்றில் பின்புறம் சிறிய பஞ்சு மிட்டாய் செய்யும் இயந்திரத்துடன் தெருத்தெருவாகச் சென்று பஞ்சு மிட்டாய் விற்கிறார் பிரதாப் சிங் எனும் அந்த முதியவர். தன்னிடம் பஞ்சு மிட்டாய் வாங்கும் சிறுவர்களிடம் அவர் காசு வாங்குவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களது வீட்டில் குப்பையில் போடப்படும் உதிர்ந்த முடிகளை கொத்தாக வாங்கிக் கொள்கிறார்.

முடிக்கு தக்க இனிப்பு
எவ்வளவு முடி தருகிறார்களோ அந்த அளவிற்கு பஞ்சு மிட்டாய் தருகிறார் இந்த முதியவர். எனவே இவரிடம் பஞ்சு மிட்டாய் வாங்குவதற்கென்றே வீட்டில் அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என பலரது உதிர்ந்த முடிகளைச் சேகரித்து எடுத்து வருகின்றனர் சிறுவர், சிறுமியர். இவர்களிடம் இருந்து பெறப்படும் முடியை சேகரிப்பதற்கென்றே தனது சைக்கிளில் சில பைகளைக் கட்டித் தொங்க விட்டுள்ளார் அந்த முதியவர்.

அதிக வருமானம்
சரி, காசுக்குப் பதில் இப்படி முடியைச் சேகரித்து அவர் என்ன செய்யப் போகிறார் என்றுதானே யோசிக்கிறீர்கள். அங்கு தான் அந்த முதியவரின் சாமர்த்தியத்தைப் பாராட்ட வேண்டும். தான் விற்கும் பஞ்சு மிட்டாய்க்கு சிறுவர்களிடம் காசு வாங்கினால்கூட ஈட்ட முடியாத அளவு வருமானத்தை, அந்த முடி கொத்துகள் மூலம் அவர் சம்பாதிக்கிறார் என்று சொன்னால் நிச்சயம் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

விக் செய்ய விற்பனை
ஆம், அவர் பஞ்சு மிட்டாய் கொடுத்து சேகரிக்கும் முடிகளை விக் செய்பவர்களிடம் கிலோ ரூ. 3 ஆயிரம் என்ற அளவில் அவர் விற்பனை செய்கிறார். பஞ்சு மிட்டாயை பார்க்கும் போது தலை முடி போல இருக்கிறது என்பதாலும், சிறுவர்களை வைத்து எளிதாக இந்தத் தொழிலை வருமானம் ஈட்ட முடியும் என்பதாலும் இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை அவர் செய்துள்ளார்.

பாடம்
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இப்படித்தான் அவர் பஞ்சு மிட்டாய் விற்று வருமானம் ஈட்டி வருகிறாராம். பஞ்சு மிட்டாய் விற்று என்ன லாபம் பார்த்துவிட முடியும் என நினைப்பவர்களுக்கு மத்தியில், தனது வித்தியாசமான சிந்தனையால் இன்று பலருக்கு புதிய வியாபார நுணுக்கத்தைக் கற்றுத் தந்திருக்கிறார் இந்த முதியவர்.

பாராட்டு
இந்த முதியவரின் வீடியோவைப் பார்த்தவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். கூடவே அவரின் வியாபார தந்திரத்தையும் பாராட்டி வருகின்றனர். ஒரே ஒரு வீடியோ மூலம் இன்று இணைய உலகில் பிரபலமாகி விட்டார் இந்த வயதான வியாபாரி. எதையும் மாற்றி யோசித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதற்கு நிச்சயம் இவர் சிறந்த உதாரணம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications