பிஎச்டி படிக்க இளநிலை பட்டம் இருந்தாலே போதும்.. முதுநிலை படிப்பு தேவையில்லை! ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு
டெல்லி: நான்காண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி நேரடியாக நெட் தேர்வை எழுதி பிஎச்டி படிக்கலாம் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாகவே உயர்நிலை கல்வியைப் படிப்போர் எண்ணிக்கை அதிகம். இது தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தில் பல மடங்கு அதிகம். அதேநேரம் தேசியளவில் இப்போது தான் இது மெல்ல அதிகரித்து வருகிறது.

இதனால் உயர்கல்வியை மாணவர்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் தொடர மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே இப்போது பிஎச்டி படிப்பிற்கான தேவையில் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
பிஎச்டி: இதுவரை நமது நாட்டில் பிஎச்டி படிப்பில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பிரிவில் இரண்டு வருட முதுகலை அல்லது எம்ஃபில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பிரிவில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், அல்லது அதற்குச் சமமான கிரேடு பெற்றிருக்க வேண்டும் என்பதே தற்போது இருக்கும் விதிமுறை. இதில் தான் சில தளர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
தளர்வுகள்: அதாவது பிஎச்டியை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அதற்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்பை முடித்து இருந்தாலே போதும். இளங்கலை படிப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மார்க் அல்லது அதற்குச் சமமான கிரேடுகளை பெற்றிருந்தால் போதும்.
இதுவரை, தேசிய தகுதித் தேர்வை எழுதவே ஒருவர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் தான் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை போதும்: இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், "இனி நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டியை படிக்கலாம் மற்றும் நெட் தேர்வை எழுதலாம். இந்த மாணவர்கள் நான்காண்டு எந்த பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்கள் விரும்பும் பிரிவில் பிஎச்டி படிக்கலாம்.
இதற்காக மாணவர்கள் நான்கு ஆண்டு அல்லது எட்டு செமஸ்டர்களை கொண்ட இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், அதில் அவர்கள் குறைந்தபட்சம் 75 மதிப்பெண்கள் அல்லது அதற்குச் சமமான கிரேடுகளை பெற்றிருக்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார். எஸ்சி, எஸ்டி, ஒபிசி (Non creamy layer), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இதில் ஐந்து சதவீத மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ட்விஸ்ட்: இதில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது நாட்டில் பொறியியல் உள்ளிட்ட சில பாடங்களை தவிர பெரும்பாலான பிரிவுகளுக்கு இளங்கலை படிப்பு மூன்று ஆண்டுகள் தான். அவர்களால் நேரடியாக பிஎச்டி படிக்க முடியாது. நான்கு ஆண்டுகள் இளநிலை படிப்பை முடித்தவர்களால் மட்டுமே நேரடியாக பிஎச்டி படிக்க முடியும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications