Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடித்து கிளம்பும் கொலீஜியம் பஞ்சாயத்து! ஆட்சியா? ரௌடியிசமா? பிரதமருக்கு சு.சாமி நறுக் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொலீஜியம் மூலம் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இதனை குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

நீதிபதிகள் நியமனம் குறித்து மத்திய அரசு சமீப காலமாக மாற்றுக்கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்து வருகிறது. அதேபோல கொலீஜியம் அமைப்பு முறை குறித்தும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலுவை வழக்குகள் எண்ணிக்கை விரைவில் குறையும் என்று நினைக்கிறேன்.

1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. ஆனால் தற்போது கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதனை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று கூறியிருந்தார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் இவரது கருத்துகளுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் என பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கிரண் ரிஜிஜூ நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில், "கடந்த 25 ஆண்டுகளாக கொலீஜியம் முறையின் கீழ் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. எனவே கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க அரசு பரிந்துரைக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம்

கடிதம்

இந்த கடிதம் குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அவர், "தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யபோது கொலீஜியத்தின் செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை பின்னபற்றிதான் தற்போது தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இவ்வாறு கடிதம் எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தற்போது வரை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை கொலீஜியம் அமைப்புதான் நியமனம் செய்கிறது. ஆனால், கொலீஜியம் அமைப்புக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வந்தது.

 கொலீஜியம்

கொலீஜியம்

இந்த ஆணையத்தில் மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் இருவர் என மொத்தம் 6 பேர் இருப்பார்கள். இவர்கள்தான் நீதிபதிகளை நியமனம் செய்வார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் கடந்த 2015ல் நடந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.சேகர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மத்திய அரசின் இந்த யோசனையை தவறு என்று கூறி இம்முறையை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த பின்னணியில்தான் தற்போது கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

சுப்பிரமணிய சுவாமி

சுப்பிரமணிய சுவாமி

இந்த கடிதத்தை குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசுக்கு விமர்சனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மோடி அரசால் சீனாவின் ஆக்கிரமிப்பு பிரச்னையையோ, பொருளாதாரத்தையோ சரி செய்ய முடியவில்லை. ஆனால், விசுவாசமான நீதிபதிகளை நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்கிறது. இதனை ஆட்சி என்று சொல்வதா? அல்லது ரௌடியிசம் என்று சொல்வதா? நமது அரசியலமைப்பின் 217 வது பிரிவைப் படிக்க பிரதமருக்கு நான் வலியுறுத்துகிறேன். இது சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் கூட பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இதை ஏன் படிக்க வேண்டும் எனில், மத்திய அரசு குடியரசுத் தலைவர் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மட்டுமே முடிவு செய்ய முடியும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பொறுத்தவரை, அவர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட தனிக்குழுதான் நியமிக்கும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+