2024 இல் மோடியே பிரதமர் வேட்பாளரானால்! பாஜக அழிஞ்சிடும்.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்
டெல்லி: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி இல்லாவிட்டால் பாஜக வெற்றி பெற்று செழிப்பாக வளரும் இல்லாவிட்டால் அவ்ளவுதான் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமி சொந்த கட்சியையே கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலின் போது தமிழக பாஜக தோற்கும் என தெரிவித்திருந்தார்.

அது போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும் பாஜக போட்டியிடவில்லை. கூட்டணி தலைமையான அதிமுகவே களம் கண்டது. இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்ட போது தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட வேண்டும்.
எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும். அப்போதுதான் பாஜக வளர்வதாக அர்த்தம். ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் சேர்ந்தால் இருக்கிற வாய்ப்பும் போய்விடும் என சென்னையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சொந்த கட்சியாக இருந்தாலும் பாஜகவை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சிப்பார்.
பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாதவர் நிதியமைச்சர் என நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது சுப்பிரமணியன் சுவாமி திருப்பதியில் பேசிய போது தமிழகத்தில் பாஜக 2, 3 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்றார்.
அது போல் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் தமிழகத்தில் திமுகவை எதிர்ப்பதற்கு நான் ஒருத்தர் மட்டும் இருப்பதாகவே தெரிகிறது. திமுகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டிகள். முதல்வர் ஸ்டாலின் கர்ஜித்தால் இந்த பூனைக்குட்டிகள் மியாவ் என மட்டும் சொல்கின்றன. சினிமா கலாச்சாரத்தால் தமிழக பாஜக சீரழிந்துவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தமிழக பாஜகவை நேரடியாக விமர்சித்திருந்தார்.

இது போல் தொடர்ந்து சொந்த கட்சியினரை கடுமையாக விமர்சித்து வந்த சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். அது போல் அவரிடம் ஒரு நெட்டிசன்,அண்மைக்காலமாக நிறைய நிகழ்ச்சிகளில் உங்களை போன்ற தலைவர்களை பாஜக ஓரங்கட்டுவது போல் இருக்கிறதே. எனவே பாஜக வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளிக்கையில் வரும் 2024 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாவிட்டால் பாஜக வெல்லும். அதன் பிறகு பாஜக செழிப்பாக வளரும். ஒரு வேளை அவரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் முதுகெலும்பற்று கொஞ்சம் கொஞ்சமாக அழியும் கட்சியாக பாஜக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications