நாங்கள் காதலித்தது உண்மை! ஆனா ஜாக்குலினை தவறா காட்டாதீங்க.. திகாரில் இருந்து சுகேஷ் உருக்கமான கடிதம்
டெல்லி: பாலிவுட் நடிகை ஜாக்குலினை தவறாக காட்டுவதை கைவிடும் படி ஊடகங்களுக்கு சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினரை ஏமாற்றி பணம் பறித்ததாக புகார்கள் எழுந்தன.
அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்த போது முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு வாங்கி தருவதாக கூறி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பிரபல மருந்து நிறுவனம்
இதுவரை சுகேஷ் மீது 21 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல மருந்து நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங், மல்விந்தர் சிங் ஆகியோர் ரூ 2000 கோடி பணமோசடி செய்ததாக இருவரும் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

காதலி
இந்த வழக்கில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர அவர்களின் மனைவிகளிடம் சுகேஷ் திகார் சிறையிலிருந்தவாறே ரூ 200 கோடி பணம் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சுகேஷ், அவரது காதலியும் நடிகையுமான லீனா மரியபால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ரூ 52 லட்சம்
இது தொடர்பான விசாரணையில் சுகேஷ், நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு ரூ 52 லட்சம் மதிப்பிலான குதிரை, தலா ரூ 9 லட்சம் மதிப்பிலான பெர்சிய பூனைகள், வைர கம்மல், பிரேஸ்லெட், விலையுயர்ந்த ஹேண்ட் பேக், முன்னணி நிறுவனத்தின் ஷூக்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.

நூரா ஃபதேய்
ஜாக்குலின் மட்டுமல்லாமல் சுகேஷ், மற்றொரு நடிகை நூரா ஃபதேயிக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளதும் தெரிகிறது. இதையடுத்து ஜாக்குலினும், நூராவும் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். தனக்கும் சுகேஷுக்கும் காதல் இல்லை என்றும் அவருடன் டேட்டிங் போனதில்லை என்றும் ஜாக்குலின் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

வைரல் புகைப்படங்கள்
இந்த நிலையில் ஜாக்குலினும் சுகேஷும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. இருவரும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதும், ஜாக்குலின் கழுத்தில் இருந்த லவ் பைட் புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து ஜாக்குலின் மீதான அமலாக்கத் துறை விசாரணையின் பிடி இறுகியது. தற்போது சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தனது வழக்கறிஞர் மூலம் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை கடிதம் மூலம் விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் இருவரும் காதலித்தோம். எங்களது தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவது வருத்தமாக இருக்கிறது.
Recommended Video

தொடர்பு இல்லை
இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறுவதாகும். நான் அவருக்கு கொடுத்த பரிசுப் பொருட்கள் எல்லாம் காதலின் அடிப்படையில் வாங்கிக் கொடுத்தது. எனவே அவருக்கும் இந்த வழக்கிற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. அவர் என்னை காதலித்ததை தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை. எனவே ஜாக்குலினை தவறாகக் காட்ட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications