மோடியை சுனிதா வில்லியம்ஸுக்கு பிடிக்காதா? கொலை.. பரம்பரை பகை? சீரியஸாகும் பழைய மேட்டர்! ஃப்ளாஷ்பேக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக சுனிதா வில்லியம்ஸை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே அக்கடிதத்தை வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. மோடி முதலமைச்சராக இருந்த போது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுனிதா வில்லியம்ஸின் உறவினர் ஹரேன் பண்ட்யா கொல்லப்பட்டதற்கு மோடி தான் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், சுனிதா மோடியை சந்திப்பதை பல ஆண்டுகளாக தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற சுனிதா வில்லியம்ஸ் இன்று டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். திட்டமிட்டபடி அதிகாலை காலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலத்தின் கேப்சூல் ஃப்ளோரிடா கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

Sunita Williams narendra modi us

இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸ் கேப்சூலில் இருந்து மீட்கபட்டு ஃப்ளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மேலும், அவருடன் வந்த சக வீரர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் 286 நாள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி சுனிதா வில்லியம்ஸ்-ல் 140 கோடி இந்தியர்கள் பெருமை அடைவதாக தெரிவித்திருந்தார். சுனிதா வில்லியம்ஸ்க்கு அவர் எழுதிய கடிதத்தில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் இருந்தாலும் எங்களின் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள்" என கூறியிருந்தார்.

ஆனால் தற்போது மட்டுமல்ல கடந்த காலத்திலும் பிரதமர் மோடியை சந்திப்பதை சுனிதா வில்லியம்ஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. கடந்த7ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு இருந்தார். இப்போது போல அப்போதும் குஜராத் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி சுனிதா வில்லியம்ஸ் வருகை தொடர்பாக வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஆனால், விஸ்வ குஜராத் சமாஜ் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் முதலமைச்சராக இருந்த மோடி அவருக்கு வாழ்த்து கூற தெரிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் சாதனைகளை பெருமையாக கொண்டாடும் அப்போதைய முதலமைச்சர் மோடியின் அரசு, சுனிதா வருகை குறித்து எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அதற்கு சுனிதா வில்லியம்ஸ் குடும்பம் தொடர்பான அரசியல் நிகழ்வுகள் தான் காரணம் என அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸின் உறவினரான ஹரேன் பாண்டியா குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கும் பாஜகவில் மோடிக்கும் இடையே அரசியல் பிளவு இருந்ததாக கூறப்படுகிறது. குஜராத் முதலமைச்சராக கோசுபாய் இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்தவர் ஹரேன் பாண்டியா. அவருக்குப் பிறகு மோடி முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது ஹரேன் பாண்டியா வருவாய்த்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஹரேன் பாண்டியாவுக்கும் மோதல் முற்றியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஹரேன் பாண்டியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சில மாதங்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு அவர் கொலை செய்யப்பட்டபோது அவரது தந்தையான விட்டல் பாண்டியா நரேந்திர மோடியை நேரடியாக குற்றம் சாட்டினார்.

சுனிதா வில்லியம்ஸ் 1998 ஆம் ஆண்டு குஜராத் வந்தபோது ஹரேன் பாண்டியாவின் தேர்தல் வெற்றி பேரணியில் பங்கேற்றார். ஆனால் ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்டபோது விண்வெளி பயிற்சியிலிருந்ததால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யாவின் நெருங்கிய உறவினர் தான் ஹரேன் பாண்டியா.

குஜராத்தின் மேசனா பகுதியைச் சேர்ந்த அவர் அமெரிக்காவில் குடியேறிய பின் 1965ல் தான் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மைக்கேல் வில்லியம்சை சுனிதா திருமணம் செய்திருந்தாலும் இந்து மரபுகளை தொடர்ந்து பின்பற்றி வருபவர். அதனால்தான் தனது விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை, விநாயகர் சிலை ஆகியவற்றை கொண்டு சென்றிருந்தார்.

அப்போது சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வந்திருந்த போது முதலமைச்சராக் மோடி அவரை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் மோடியின் அமைச்சரவையில் இருந்த ஹரேன் பாண்ட்யா அவரது ஆட்சி காலத்திலேயே கொலை செய்யப்பட்டதால் அவரோடு போட்டோ எடுக்க சுனிதா சம்மதிக்கவில்லை எனவும் அப்போதைய சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+