சின்னதாய் மாற்றி யோசித்த இளைஞர்.. JioHotStar தேடுதே.. காத்திருக்கும் பண மழை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த உலகில் பொதுவாகவே வழக்கமான சிந்தனைகளில் இருந்து மாற்றி யோசிப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. வழக்கமாக எல்லோரையும் போல் சிந்திக்காமல் எளிதான தீர்வுகளை கண்டுபிடிப்பவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இங்கு கோடிகளை சம்பாதிக்கலாம். டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் 'ஜியோ ஹாட்ஸ்டாரின்' டொமைனை வாங்கினார். அவருக்கு சூப்பர் ஜாக்பாட் காத்திருக்கிறது.

பல பிரச்சினைகளுக்க சின்னதாய் மாற்றி யோசித்தால் தீர்வு எளிதாக கிடைக்கும். ஒருமுறை சிறுவன் ஒருவர் படிக்கட்டில் உள்ள கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டான். அவனை மீட்க பெற்றோர், போன வழியிலேயே அவனை இழுக்க முயற்சித்தனர்.ஆனால் வெளியே இழுக்க முடியவில்லை.. இதனால் ரம்பத்தை எடுத்து அறுத்து வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் சிறுவனே எந்த வழியாக தலையைவிட்டு வெளியே வர முயன்றானோ அதே வழியில் எளிதாக வந்துவிட்டான்..

ott jio hot star

சென்னை பல்லாவரத்தில் பல வருடங்களாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. அந்த பாதையில் நெரிசலை சரி செய்ய அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை..விமான நிலையத்தையும், தாம்பரத்தையும் இணைக்கும் அந்த இடத்தில் தான் போரூர் சந்திப்பும் உள்ளது.. இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றி யோசித்த போலீசார், ஒரு வழிப்பாதையை உடைத்து இரு வழியிலும் வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர். அதன்பிறகு அந்த பாதையில் ஓரளவு சிக்கல் குறைந்தது.

உலகமே ஒரு ஜிபிக்கு இவ்வளவு பணம் என்று வசூலித்த போது, அன்லிமிடெட் கால், அளவற்ற டேட்டா என ரிலையன்ஸ் ஜியோ மாற்றி யோசித்தது. இதன் காரணமாக இன்று இந்தியாவிலேயே ரிலையன்ஸ் ஜியோ தான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது.

இதெல்லாம் மாற்றி யோசித்தவர்களின் உதாரணம். அந்த வரிசையில் தான் டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் 'ஜியோ ஹாட்ஸ்டார்' டொமைன் நேமினை வாங்கியுள்ளார். அதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கிடைக்க போகிறது.

இந்தியாவில் சிறிய சினிமாப் படங்கள் திரையரங்குகளுக்கு பதில் ஓடிடியில் தான் வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அதில் முன்னணியில் உள்ள ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளங்கள் இணைவது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இந்த இரண்டு நிறுவனங்களும் எப்போது ஒன்று சேரும் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இப்போது நிறுவனங்களும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, 'ஜியோ ஹாட்ஸ்டார்' என பொதுவான பெயரில் அறியப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின,

சந்தாதாரர்கள் அடிப்படையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன. இதன் இணைப்பு ஸ்ட்ரீமிங் தள சந்தையில் தனிகாட்டு ராஜாங்கத்திற்கு வழிவகை செய்யும் என்ற விமர்சனமும் உள்ளது. இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பொதுவான பெயரில் ஜியோ சினிமா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரப்போகிறது. ஆனால் அவர்களுக்கான டொமைன் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் அந்த டொமனை டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் வைத்து இருந்தார். அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதுகுறித்து அந்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவில், "நான் டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர். 2023-ன் தொடக்கத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இந்தியாவில் தனது பயனர்களை இழந்து வருவதாக செய்திகள் மூலம் அறிந்தேன். அப்படி பார்த்த போது, இந்தியாவில் இயங்கும் வேறொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்பட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடிவு என்பதையும் அறிந்தேன். அந்த வகையில் இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் யாருடன் இணைய வாய்ப்புள்ளது என கண்டுபிடித்தேன்..

ரிலையன்ஸ் நிறுவனம் அதனை வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாக அறிந்து, ஜியோஹாட்ஸ்டார்.காம் டொமைன் நேம் குறித்து தேடினேன். அந்த டொமைன் எனக்கு கிடைத்தது. நான் எதிர்பார்த்தபடியே இந்த இரண்டு தளங்களும் இப்போது இணைந்துள்ளன. ஜியோ ஹாட்ஸ்டார் என இது அறியப்படுவது இரண்டு தளங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும். அது என்னிடம் தான் உள்ளது.

இந்த டொமைன் நேம் தேவைப்படுகின்ற ரிலையன்ஸ் நிறுவனம் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். நான் அதனை விற்பனை செய்ய தயார். இதில் கிடைக்கும் தொகை மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் படிப்பேன்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+