"அவருக்கு அதிகாரமே இல்லை.." தலைமை தேர்தல் ஆணையரை எதிர்த்த வழக்கு.. உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் மற்றும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்குகளை அடுத்த வாரமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்பாக ஒரு வாரமாகவே சர்ச்சை தொடரும் நிலையில், வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. தங்களது அறிவுறுத்தல் அல்லது பரிந்துரை இல்லாமலேயே சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக இருவரும் தெரிவித்திருந்தனர்.

Supreme court election Comission SIR

தேர்தல் ஆணையம்

ஆனால், தேர்தல் ஆணையம் இதை திட்டவட்டமாக மறுத்திருந்தது. இதுபோல கருத்துகளை கூறுவது எல்லாம் வழக்கமான நடைமுறை தான் என்றும் தேர்தலை சிறப்பாக நடத்த பல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படுவது வாடிக்கை தான் எனவும் தேர்தல் ஆணையம் கூறியது. இருப்பினும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக எடுத்து செல்கிறது. காங்கிரஸ், கரப்பான் பூச்சி கட்சி உள்ளிட்டோர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் ராகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டதன் நோக்கமே முக்கிய முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்று அவர் வாதிட்டார்.

அடுத்த வாரமே விசாரணை

ஆனால், சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டதா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும், அவர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளையும் மனு சுட்டிக்காட்டுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவின்படி, தேர்தல்களை மேற்பார்வையிடும் அதிகாரம் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் வழங்கப்படவில்லை என்றும் அது தேர்தல் ஆணையம் என்ற அமைப்பிடமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு கூறுகிறது.

எஸ்ஐஆர்

மேலும், 2023ம் ஆண்டின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் தொடர்பான சட்டத்தின் 18வது பிரிவின்படி, தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த நடைமுறைக்கு மாறாக ஒருவரால் மட்டும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று அறிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

எஸ்ஐஆர் நடவடிக்கையில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. எனவே, எஸ்ஐஆர் நடவடிக்கையை தொடக்கம் செல்லாதது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள், முடிவுகள், உத்தரவுகள் செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். அதாவது எஸ்ஐஆர் காரணமாக அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பது போல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போதே முக்கிய தகவல்கள் தெரிய வரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+