ஓபிசி பிரிவை போலவே எஸ்சி பிரிவிலும் கிரீமி லேயர் வரையறை வேண்டும்! சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து
டெல்லி: எஸ்சி பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓபிசி பிரிவில் இருப்பதைப் போலவே எஸ்சி பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரைமுறை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டில் எஸ்சி பிரிவினருக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சாதியினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.. இந்த உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் எஸ்பி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டன. இதுபோல நாடு முழுக்க 20 மனுக்களை இருந்த நிலையில், அதை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதாவது பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை இருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் தலையிடும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் கிரீமி லேயர் தொடர்பாகவும் 4 நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதில், "ஓபிசி பிரிவில் கிரீமி லேயர் என்ற பிரிவு இருக்கிறது. அதேபோல எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் வரையறை கொண்டு வர வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகனையும், ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒருவரையும் ஒரே நிலையில் எப்படி வைத்துப் பார்க்க முடியும்.
எனவே, முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு மூலம் உயர்ந்த அந்தஸ்துக்கு வந்துவிட்டால்.. 2ம் தலைமுறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications