டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூஷணின் ட்விட் .. நாங்க சொன்னால் தான் டெலிட் பண்ணுவீங்களா! ட்விட்டருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 6 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்று டுவிட் போட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிண் இரண்டு அடுத்தடுத்த ட்வீட்களை நீக்ககாது ஏன் என்று உச்ச நீதிமன்றம் டுவிட்டர் இந்தியா நிறுவத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்று டுவிட் போட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிண் அடுத்தடுத்த இரண்டு ட்விட்களுக்கு எதிராக தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த மாதம் 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து ட்விட்டரில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ராத்திரி நேரம்.. 100 அடி கிணறு.. டார்ச் அடித்து பார்த்த சித்தராஜ்.. வீலென்று அலறல்.. என்னாச்சு?!ராத்திரி நேரம்.. 100 அடி கிணறு.. டார்ச் அடித்து பார்த்த சித்தராஜ்.. வீலென்று அலறல்.. என்னாச்சு?!

6 ஆண்டுகளில்

6 ஆண்டுகளில்

அவர் தனது ட்விட் பதிவில், "எதிர்காலத்தில் திரும்பிப் பார்த்தால், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரபூர்வ அவசரநிலை பிறப்பிக்கப்படாமல் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை வரலாற்று அறிஞர்கள் அறியலாம். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்கும் தெரியவரும்" என்று கூறியிருந்தார். இந்த ட்விட் பதிவை அடுத்து பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளது.

 ஹார்லி டேவிட்ஸன் பைக்

ஹார்லி டேவிட்ஸன் பைக்

இதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை விமர்சித்த பிரசாந்த் பூஷண் முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த இருசக்கர வாகனத்தை இயக்கவில்லை. வெறுமென அமர்ந்து மட்டுமே பார்த்திருந்தாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவர் அமரும் முன்பு வரை முககவசம் அணிந்திருந்தாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் கோபம்

உச்ச நீதிமன்றம் கோபம்

உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷண் மீது வழக்கு தொடர இன்னெரு காரணம் புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கு. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற கையாண்ட விதத்தையும், விசாரித்ததையும் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்து இருந்தார். கடைசியாக பிமா கோரிகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக ஆர்வலர்கள் வரவரா ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் உள்ளதாகவும், அதை நீதிமன்றம் கண்டிக்கவில்லை என்றும் பிராசந்த் பூஷண் விமர்சனம் செய்தார். இப்படி தொடர்ச்சியாக விமர்சனம் செய்ததால் கோபம் அடைந்த உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட அனுமதித்ததாக ட்விட்டர் இந்தியா மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்துள்ளது.

அவமதிப்பு வழக்கு

அவமதிப்பு வழக்கு

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் ஆகியோர் முன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஒவ்வொரு விஷயத்தையும் நீக்க நீதிமன்ற உத்தரவுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியது. "நீங்கள் ஏன் இதை சொந்தமாக செய்ய முடியாது? நாங்கள் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகும், நீங்கள் ஒரு முறையான உத்தரவுக்காகக் காத்திருக்க விரும்புகிறீர்களா? இதில் எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க மாட்டோம், அதை உங்கள் ஞானத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறோம்," என்று கூறியது. ட்விட்டருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஜன் போவய்யாவிடம் நீதிபதிகள் கூறினார்.

 பதில் அளிக்க உத்தரவு

பதில் அளிக்க உத்தரவு

இதற்கு பதில் அளித்த சஜன் போவய்யா, இந்த நேரத்தில், நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ட்விட்டர் நிறுவனத்திடம் இந்த கருத்தை தெரிவிப்பேன் என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு இதற்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. வழக்கை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டது.

English summary
Supreme Court Contempt Case Against advocate Prashant Bhushan, Twitter India for two tweets, . today hearing .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X