ரூ2,000 நோட்டு வாபஸ் வழக்கு.. அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் அடையாள ஆவணங்கள் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்தாலும் சில ஆண்டுகளில் கணிசமாக புழக்கத்தில் குறைந்தது.

அதேபோல், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. புதிதாக அச்சடிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை எனவும் வங்கிகள் தெரிவித்தன.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எந்த ஒரு ஆவணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்ட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபத்தாய் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் சுதன்ஷூ துலியா மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு மனுதாரரை அறிவுத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications