தலைமை தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்த வழக்கு.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதில் பிரதமர் தேர்வு செய்யும் மத்திய அமைச்சர் இடம்பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்டதீர்ப்பு கூறியதால் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

supreme-court-delivers-split-verdict-on-chief-election-commissioner-and-election-commissioner-select

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். இவர்களை தேர்வு செய்ய தனியாக குழு உள்ளது. இந்த குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால், கடந்த 2023ல் இது மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் தேர்வு குழுவில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் திபங்கர் தத்தா, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு விசாரித்து வந்தனர். இந்த சமயத்தில் மத்திய அரசு சார்பில் இந்த வழக்கை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான் நீதிபதிகள் திபங்கர் தத்தா, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி சதீஷ் சந்திர சர்மா வழங்கிய தீர்ப்பில், ''அரசியல் சாசனத்தின் 145 பிரிவு 3ன் கீழ் அரசியல் சாசன அமர்வுக்கு விசாரிக்க வேண்டும்'' என்று கூறினார்.

ஆனால் நீதிபதி திபங்கர் தத்தா வழங்கிய தீர்ப்பில், ''2023ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் என்பது நிர்வாகத்துறைக்கு வீட்டோ அதிகாரம் வழங்குவது போல் உள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவின் நியமன செல் முறை என்பது நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்பது உண்மையாகவே சுதந்திரமாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை சார்ந்தே அமைகிறது. ஏதர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது மட்டும் போதது. அது சுதந்திரமான செயல்படுவதாக வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்.

பிரதமரால் பரிந்துரை செய்யப்படும் ஒருவர் எப்படி பிரதமரரின் முடிவை எதிர்த்து செயல்படுவார்? என்ற கேள்வி வருகிறது. இருப்பினும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை வைத்து அரசியல் சாசன அமர்வுக்கு வழங்கலாமா? வேண்டாமா? என்று விசாரித்தால் காலதாமதம் ஏற்படும். இதனை விரும்பவில்லை. இதனால் அரசியலமைப்பு சாசன அமர்வை அமைப்பது பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார்'' என்றார். இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+