எதே.. பிபிசியை தடை செய்யணுமா? இந்து சேனாவை ‛லெப்ட் ரைட்’ வாங்கிய உச்சநீதிமன்றம்
"பிபிசி ஆவணப்படம், மோடியின் நற்பெயருக்கு மட்டும் களங்கம் விளைவிக்கவில்லை. மாறாக, இந்தியாவின் சமூக கட்டமைப்பையே அழிக்கும் வகையில் அதன் பிரச்சாரம் உள்ளது"
டெல்லி: இந்தியா முழுவதும் பிபிசி தொலைக்காட்சியை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மேலும், "பிபிசியை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தை உங்களால் எப்படி அணுக முடிகிறது?" என்றும் நீதிபதிகள் வினவினர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து, இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை கிளப்பிய ஆவணப்படம்
பிபிசி அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம்தான் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த ஆவணப்படம், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறது. குறிப்பாக, அந்தக் கலவரத்திற்கும், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பது போல இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்

அதிரடி தடை
குஜராத் கலவரத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சம்பந்தமில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியதை அடுத்து, பிபிசி எப்படி இந்த ஆவணப்படத்தை வெளியிடலாம் என பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இதனிடையே, இந்த ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறி மத்திய அரசு அதை தடை செய்துள்ளது. எனினும், இந்த தடையை மீறி நாடு முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதேபோல, பல எதிர்க்கட்சிகளும் இந்த ஆவணப்படத்தை மக்களுக்கு திரையிட்டு காண்பித்து வருகின்றனர்.

"பிபிசியை தடை செய்க"
இந்நிலையில், இந்து சேனா அமைப்பின் தலைவர் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உலக அளவில் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக செய்யப்படும் சதிவேலையாகவே பிபிசியின் இந்த ஆவணப்படம் இருக்கிறது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக சித்தரிக்கும் இந்த ஆவணப்படம், மோடியின் நற்பெயருக்கு மட்டும் களங்கம் விளைவிக்கவில்லை. மாறாக, இந்தியாவின் சமூக கட்டமைப்பையே அழிக்கும் வகையில் அதன் பிரச்சாரம் உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் பிபிசிக்கு தடைவிதிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டிருந்தது.

"எப்படி உங்களால் வாதிட முடிகிறது?"
இந்த மனுவானது, நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, "இந்த மனு முழுக்க முழுக்க தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பிபிசியை தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்திடம் எப்படி உங்களால் கேட்க முடியும்? எப்படி உங்களால் இப்படி வாதிட முடிகிறது?" என சரமாரியாக கேள்வியெழுப்பினார். பின்னர், புரிதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் அவர் உத்தரவிட்டார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications