Jana Nayagan: ‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கல்.. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: விஜய்யின் 'ஜனநாயகன்' படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் செய்யப்படவில்லை. சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் 'ஜனநாயகன்'. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த 9 ஆம் தேதி உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'ஜனநாயகன்' படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.
மேலும், விசாரணையின்போது தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்? சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்? நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பியது தலைமை நீதிபதி அமர்வு.
அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஐகோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறி உள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எண்ணிடப்பட்டது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வில் ஜனநாயகன் பட வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "இந்தத் தணிக்கை விவகாரத்திற்குள் நாங்கள் தற்போது நேரடியாகச் செல்ல விரும்பவில்லை; நீங்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு முன்பே சென்று முறையிட வேண்டும்" எனத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் விஜய் தரப்புக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து 'ஜனநாயகன்' விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
-
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
வசமாக சிக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவின் ஸ்கெட்ச்! தவெகவுக்கு இப்படியா நடக்கனும்! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய் -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம் -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்! -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி!












Click it and Unblock the Notifications