பெண்களால் எல்பிஜி சிலிண்டரை தூக்க முடியாதா? ஐஓசி-க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்களால் சிலிண்டர் தூக்க முடியாது என வேலை மறுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது போல் பெண்களை இழிவாக நினைப்பது பெண்மைக்கே அவமானம் என்றும் கண்டித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் நிரப்பும் ஆலையில் ரீஃபில்லிங் ஹெல்பர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். அவருடன் விண்ணப்பித்திருந்த 49 பேருக்கும் பணியாணை கிடைத்துவிட்டதாம். ஆனால் சுமித்ராவுக்கு மட்டும் கிடைக்கவில்லையாம்.

LPG Cylinders

இதுகுறித்து சுமித்ரா , ஐஓசியில் கேட்ட போது இது போன்ற கடுமையான வேலைகளை பெண்களால் செய்ய முடியாது என கூறி அவருக்கு பணி நியமனம் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துவிட்டது. தன்னால் இது போன்ற பணிகளை செய்ய முடியும் என சுமித்ரா நம்பிக்கை தெரிவித்தும் ஐஓசி அவருக்கு பணியாணை வழங்கவில்லை.

இதையடுத்து சுமித்ரா இது குறித்து உச்சநீதிமன்றத்தில் 1988 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலம் கழித்து விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த பாரபட்சமான முடிவுகள் நீதிபதிகள் அமர்வு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. நீதிபதிகள் கூறுகையில், "பெண்களால் சிலிண்டர்களை தூக்க முடியாது என நீங்கள் எப்படி நினைக்கலாம்?

வீடுகளில் ஆண்கள் இல்லாத போது சிலிண்டர்களை தூக்கி மாற்றுவது பெண்கள்தானே செய்கிறார்கள். அப்படியிருக்கும் போது பெண் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வேலை மறுக்கலாமா, இதை ஏற்க முடியாது.

கடந்த 1988 ஆம் ஆண்டு சுமித்ரா சட்ட போராட்டத்தை தொடங்கினார். தற்போது அவருக்கு 63 வயதாகிறது. எனவே இப்போது அவருக்கு பணி வழங்க முடியாது என்பதால் அவருக்கு பணம் ரீதியிலான இழப்பீடு வழங்குவதே சரியானதாகும்.

இதையடுத்து சுமித்ராவுக்கு ஒரே தவணையாக ரூ 12 லட்சம் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+