Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநிலங்களை தங்களுக்கு கீழாக மத்திய அரசு கருதக்கூடாது! உச்சநீதிமன்ற நீதிபதி மிக தெளிவாக சொன்ன கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அது தேர்தல் முடிவுகளைச் சார்ந்து செயல்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்தார். அப்படிச் சார்ந்து இருந்தால் தேர்தல் ஆணையத்தால் நடுநிலையாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மாநில அரசுகளை மத்திய அரசு தனக்குக் கீழாக இருப்பது போல நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீப காலமாகவே தேர்தல் ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் மேற்கு வங்க அரசும் கூட தேர்தல் ஆணையத்தின் மீது எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் போலவும் கூறியிருந்தனர்.

Supreme court on Centre state relationship Clashes between States weaken constitutional fabric

உச்ச நீதிமன்றம்

இதற்கிடையே தேர்தல் ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தேர்தல்களை நடத்துவதற்கும் அரசியல் செயல்முறைக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் முக்கியமானது என்பதை வலியுறுத்திய நீதிபதி பி.வி. நாகரத்னா, தேர்தல்களை நடத்துபவர்கள் அதில் போட்டியிடுபவர்களை சார்ந்திருந்தால், அந்தச் செயல்முறையின் நடுநிலைமையை உறுதி செய்ய முடியாது என்று கூறினார்.

கண்காணிக்க வேண்டும்

பாட்னாவில் உள்ள சாணக்கியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பேசிய நீதிபதி நாகரத்னா, "தேர்தல் ஆணையம், சிஏஜே தணிக்கையாளர் மற்றும் நிதி ஆணையம் போன்ற நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளுக்கு அப்பாற்பட்டு, அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்புகள் பாதுகாக்கப்பட்டவை, சிறப்பு நிபுணத்துவம் கொண்டவை மற்றும் அரசியல் செயல்முறையின் நடுநிலையை உறுதிப்படுத்தக் கண்காணிக்கும் பணியைச் செய்பவை.. அவற்றின் சுதந்திரம் தற்செயலானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்புகள் வேறு ஒருவரை நிதி ரீதியாகச் சார்ந்து இருந்தால்.. அது அரசியல் சார்பை உருவாக்கும். அனைத்திற்குமான இலக்கு ஒன்று தான். நிதிகளைக் கட்டுப்படுத்தி, அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதைத் தடுப்பதே இதன் நோக்கம். உரிமைகளை மீறுவது மட்டும் அரசியலமைப்பு அமைப்புக்கு ஆபத்து இல்லை.. இது போன்ற நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவதும் அரசியலமைப்புக்கு ஆபத்து தான். அரசியலமைப்பை செயலிழக்கச் செய்யாமலேயே அரசியலமைப்பை முடக்கலாம். அதாவது சட்டத்திற்குட்பட்டே கூட அரசியலமைப்பு சீர்குலைவு நடக்கும் ஆபத்து இருக்கிறது.

அதிகார குவியல்

ஒரே அமைப்பிற்கு அதிகாரம் குவிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய அரசியலமைப்பு ரீதியாகவே பல்வேறு அமைப்புகளுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரிவு இல்லை என்றால் கட்டுப்பாடுகள் இருக்காது. இந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் போனால் எந்தவொரு அரசியலமைப்பும் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியாது. அதிகாரம் குவிவதைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இல்லையென்றால் தேர்தல்கள் தொடரலாம்.. நீதிமன்றங்கள் இயங்கலாம்.. நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றலாம்.. ஆனால், அதில் ஒரு ஒழுங்கு இருக்காது" என்றார்.

மத்திய மாநில உறவுகள்

மத்திய மாநில அரசுகளின் உரிமை குறித்துப் பேசிய அவர், "மத்திய மாநில உறவுகள் குறித்து, சமமான உறவு அமைப்பையே அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் வழக்கு தொடர்வதற்குப் பதிலாக உரையாடல், பேச்சுவார்த்தை, மத்தியஸ்தத்துவம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மாநிலத்தின் ஒவ்வொரு உறுப்பும் மற்றவர்களைத் தலையிடாமல் இருக்க வேண்டும் மாநிலங்கள் ஒன்றுக்கு ஒன்று அல்லது மத்திய அரசு மீது வழக்குகள் தொடுக்கத் தொடங்கும்போது, அது வலிமையைப் பிரதிபலிக்கவில்லை, கூட்டாட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது.

அதேபோல் மத்திய அரசு மாநிலங்களை சமமாக பார்க்க வேண்டும். இந்த சமநிலையைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது. மாநிலங்கள் என்பவை அனுதாபிகள் அல்ல, சமமானவர்களாகப் பார்க்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+