இந்தியாவில் திருமணம்.. வெளிநாட்டில் விவாகரத்து! அங்கே 2வது திருமணம் செய்தால் சட்டப்படி செல்லுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒருவர், பின்னர் வெளிநாட்டுக்கு சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டால், இந்தியாவிலும் அந்தத் திருமணம் முடிவுக்கு வந்துவிடுமா? அந்த விவாகரத்தை காட்டி இன்னொரு திருமணம் செய்துகொள்ள முடியுமா? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய கருத்தை கூறியுள்ளது.

வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோல வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் அங்கேயே செட்டிலாகியும் விடுகிறார்கள். இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிலர் அங்கேயே கூட விவகாரத்தையும் பெறுகிறார்கள்.

Supreme Court on Foreign Divorce India Supreme Court

முக்கிய கேள்வி

இருப்பினும், அப்படி வெளிநாடுகளில் விவகாரத்து பெறுவது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதே பெரிய கேள்வி. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதாவது வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு இந்திய சட்டப்படி அங்கீகரிக்கப்படாவிட்டால், முதல் திருமணம் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என கூறியுள்ளது.

சட்ட அங்கீகாரம் கிடைக்காது

இந்தியாவில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நடந்த ஒரு திருமணத்திற்கு வெளிநாட்டு நீதிமன்றம் விவாகரத்து வழங்கிவிட்டது என்பதற்காக மட்டும் இந்தியாவில் அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, 'திருமண உறவு முற்றிலும் முறிந்துவிட்டது' அதாவது ஆங்கிலத்தில் Irretrievable Breakdown of Marriage என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கும் விவாகரத்துக்கு இந்தியாவில் அப்படியே சட்ட அங்கீகாரம் கிடைக்காது.

வெளிநாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் செல்லுபடியாக வேண்டுமானால், சிவில் நடைமுறை சட்டத்தின் பிரிவு 13ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது உரிய அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும். இந்திய சட்டம் அங்கீகரிக்கும் விவாகரத்து காரணம் இருக்க வேண்டும். இரு தரப்புக்கும் சேர்ந்து வாழ முறையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய சட்டத்துக்கு முரணான நடைமுறைகள் இருக்கக்கூடாது.

எனவே, வெளிநாட்டில் விவாகரத்து பெற்றுவிட்டதாக ஒருவர் கூறினாலும், அந்த உத்தரவு இந்திய சட்டத்தின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம். அங்கீகரிக்கப்படாத விவாகரத்து உத்தரவு, இந்தியாவில் முதல் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடாது.

பின்னணி

ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த 2003 ஏப்ரல் 18ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் ஹைதராபாத்தில் வசித்த நிலையில், முதுகலை மருத்துவ படிப்புக்காக 2005 பிப்ரவரி மாதம் கணவர் இங்கிலாந்து சென்றார். பின்னர் மனைவியும் அங்கு சென்றார். 2007 ஆகஸ்ட்டில் குழந்தை பிறப்புக்காக மனைவி இந்தியா திரும்பினார். அதன் பிறகு அவர் இங்கிலாந்து திரும்பவில்லையாம்.

தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்.. அந்த கணவர் விவகாரத்து கோரி குண்டூர் மாவட்டம் நரசராவ்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அவர், திடீரென அதை திரும்பப் பெற்றார். அதேநேரம் 2013 பிப்ரவரி மாதம் பிரிட்டன் குடியுரிமை பெற்ற அந்த மருத்துவர், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் கவுண்டி நீதிமன்றத்தை விவகாரத்து கோரி அணுகினார். 2014ல் திருமண உறவு முறிந்துவிட்டதாக கூறி இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது. இதையடுத்து, அவர் நார்ஃபோக்கில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

வழக்கு போட்ட மனைவி

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மனைவி சத்தேனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல் திருமணம் சட்டப்படி முடிவுக்கு வராத நிலையில், கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறி புகாரளித்தார். அதன்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அந்த வழக்கில் தான் வெளிநாட்டில் பெற்ற விவாகரத்து இந்திய சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலிக்காமல், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. கணவர் பின்னர் பிரிட்டன் குடியுரிமை பெற்றிருந்தாலும், முதல் திருமணம் இந்தியாவில் இந்து முறைப்படி நடந்தது என்பதில் மாற்றமில்லை என்றும் கூறியது. கணவரின் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவிக்கு எதிரான நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், கணவருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தது.

உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள், அங்கு விவாகரத்து பெற்றுவிட்டால் இந்தியாவிலும் திருமணம் முடிந்துவிட்டது என்று தானாக கருதக்கூடாது. வெளிநாட்டு விவாகரத்து உத்தரவு இந்திய சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+