Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திருமணத்திற்கு முன் எப்படி உடலுறவில் ஈடுபடலாம்?" பெண் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தக் காலத்தில் திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது பரவலாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் இதனால் நடக்கும் மோசடிகளும் கூட அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே திருமணத்திற்கு முந்தைய உறவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது பெரும்பாலான இளைஞர்கள் பெற்றோரை விட்டு தனியாக வந்தே வேலை செய்கிறார்கள். அதுபோல வேலை செய்யும்போது காதலிக்கும் நபருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரப்புறங்களில் இதுபோல லிவ்-இன் உறவில் வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

Supreme Court on Live-in relation How Can They can be together Before Marriage Top Court Cautions

லிவ் இன் உறவு

அதேநேரம் லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு பிரேக் அப் ஆகும்போது, ஆண் மீது வழக்குத் தொடரும் போக்கும் அதிகரித்தே வருகிறது. அப்படித் தான் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நபர் மீது பலாத்கார வழக்கை அப்பெண் தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தன்னை மணப்பதாகக் கூறி உடல்ரீதியாக உறவு கொண்டதாகவும் பிறகு வேறொரு பெண்ணை அந்த நபர் மணந்ததாகவும் பெண் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த போது தான் நீதிபதி நாகரத்னா, திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவில் ஈடுபடும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதை வலியுறுத்தினார்.

கவனம் தேவை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதை சொல்வதால் நாங்கள் பழமைவாதிகளாகத் தோன்றலாம்... ஆனால் திருமணத்திற்கு முன்பாக ஆணும் பெண்ணும் அந்நியர்களே. உறவு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவு எப்படிச் சாத்தியம் என்பது எங்களுக்குப் புரியவில்லை. திருமணத்திற்குப் பிறகு உறவு கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு முன்னால் யாரையும் நம்பக்கூடாது" என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பின்னணி

குற்றம் சாட்டப்பட்ட ஆணும், பாதிக்கப்பட்ட பெண்ணும் 2022இல் ஒரு திருமணச் சேவை இணையதளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அந்த நபர், பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். இருவரும் துபாயில் சந்தித்தபோது நெருக்கமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடலுறவு காட்சிகள் வீடியோவாக எடுத்து அந்த நபர் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த நபர் குறித்து அப்பெண் விசாரித்துள்ளார். அப்போது தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி, தன்னை ஏமாற்றிய பிறகு ஜனவரி 2024இல் வேறு ஒரு பெண்ணையும் அவர் பஞ்சாப்பில் திருமணம் செய்துகொண்டார் என்பதும் தெரியவந்தது.

நீதிபதி கேள்வி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா, திருமணத்திற்கு முன்பாக அந்த பெண் எதற்காக துபாய் சென்றார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர், "இருவரும் திருமணத் தளத்தில் தான் சந்தித்திருந்தனர். திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இதனால் நம்பி துபாய் சென்றார்" என்றார். இருப்பினும், திருமண விஷயத்தில் அப்பெண் உறுதியாக இருந்திருந்தால், திருமணத்திற்கு முன்பு ஒன்றாக துபாய் சென்றிருக்கக்கூடாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அவர் மேலும், "திருமண விஷயத்தில் உறுதியாக இருந்திருந்தால், அவர் திருமணத்திற்கு முன்பாக துபாய் சென்றிருக்கக் கூடாது. இந்த வழக்கை மத்தியஸ்தத்திற்கு அனுப்புவோம். சம்மதத்துடன் உறவுகள் நடக்கும்போது, விசாரணை நடத்தி தண்டனை அளிக்க முடியாது" என்றார். மேலும், இந்த வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+