"கேன்சர் மருந்து 10 மடங்கு அதிக விலை ஏன்? மருத்துவமனையா இல்லை தொழிற்சாலையா? உச்சநீதிமன்றம் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயிரை காக்கும் கேன்சர் மருந்துகளுக்கு பல மடங்கு அதிக விலை நிர்ணயிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மருந்தகங்களுக்கு ரூ.2,700-க்கு வழங்கப்படும் ஒரு கேன்சர் மருந்து, மருத்துவமனைகளில் ரூ.27,000 என்று விற்கப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற நடைமுறை படுகொலை செய்வது போன்றது என வேதனை தெரிவித்தனர்.

இந்தியாவில் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தாலும் கூட பல மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதனால் உயிரை காக்கும் பல மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளது.

Supreme Court on Medicine price Supreme Court Medicine price cancer

16% லாபம்

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான 16 சதவீத லாப வரம்பை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியது. அத்தியாவசிய மருந்து, அத்தியாவசியமற்ற மருந்து என வேறுபாடு பார்க்காமல் ஒரே அளவிலான வரம்பை கொண்டுவர முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோக விலைக்கும், மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்படும் விலைக்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் ஏன் உள்ளது என்பதை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "இந்த 10 மடங்கு கூடுதல் விலை எதற்காக? இவ்வளவு பெரிய தொகை எங்கே செல்கிறது? இதனால் யார் பயனடைகிறார்கள்?" என்ற கேள்வியையும் அமர்வு எழுப்பியது.

மருத்துவமனையில் விலை அதிகம்

பல மருத்துவமனைகள் நோயாளிகள் தங்களது மருந்தகத்திலேயே மருந்துகளை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். வெளியிலிருந்து மருந்து வாங்கினால் சிகிச்சை குறித்து உத்தரவாதம் தர முடியாது என சில மருத்துவமனைகள் கூறுவதாகவும், இது போன்ற நடைமுறையை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அரசு திட்டங்களின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து செலவுகளை வரி செலுத்தும் மக்களே ஏற்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மருந்துகளின் விலை நிர்ணயத்தில் அனைவருக்கும் பொதுவான விதிமுறை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

10 மடங்கு

ஒரே பார்முலா கொண்டு மருந்து ஒரு இடத்தில் ரூ.2,700க்கு விற்கப்படும் நிலையில், அதே மருந்தை மருத்துவமனையில் ரூ.27,000க்கு விற்பது குறித்து நோயாளிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த அதிக விலையால் மருந்து நிறுவனங்கள் பயனடைகிறார்களா அல்லது தனியார் மருத்துவமனைகள் பலன் பெறுகின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றனர். தனியார் மருத்துவமனைகள் லாபத்தை நோக்கி மட்டுமே செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மருந்துகள் விலை நிர்ணயம்

மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த 2013 விதிமுறைகளின்படி 16 சதவீத லாப வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இப்போது மார்கெட்டில் உள்ள பெரும்பாலான மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்புக்கு வெளியே இருப்பதால், விலை கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த விலை வேறுபாடுகளால் மருந்து நிறுவனங்கள் பயனடைகின்றன என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+