டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள் தானே..! ஆதார் கார்ட் கொடுங்க.. அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

Google Oneindia Tamil News

டெல்லி : தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது எனவும், பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டும் முதல் இந்தியாவில் கொரோனோ பரவலின்போது பொதுமுடக்கம், வேலையிழப்பு, வறுமை ஆகியவற்றின் காரணமாக மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை வழங்கினர்.

4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்

மக்கள் வைத்திருந்த ஆதார் அட்டை அடிப்படையில் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதார் அட்டை இல்லாததால் பாலியல் தொழிலாளிகளுக்கு அந்த நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை.

 பாலியல் தொழிலாளர்கள்

பாலியல் தொழிலாளர்கள்

இந்நிலையில் பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களும் மனிதர்கள் எனவும், இந்தியாவில் பிறந்து வளர்ந்த அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டுமென கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'பாலியல் தொழில் கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்குக் கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆகவே இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்,' எனக் குறிப்பிடப்பட்டது.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக பாலியல் தொழிலாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும்படி மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி எல். நாகேசுவர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

வழக்கின் போது தங்களது கருத்துகளை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 'ஒரு தொழிலை வைத்து யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒருவர் பாலியல் தொழில் செய்தாலும் அவர்களும் மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

ஆதார் வழங்க வேண்டும்

ஆதார் வழங்க வேண்டும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் போது 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும். அத்தகையோரிடம் இருப்பிட சான்றிதழ் குறித்துக் கேட்காமல் தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு நிறுவனத்தில் அவர்கள் வகைப்படுத்தப்பட்டு இருந்தாலே, ஆதார் அட்டையை வழங்கலாம்,' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

English summary
The session, chaired by Supreme Court Judge nageswara rao , has ordered that no one be segregated by occupation and that registered sex workers and third genders be issued Aadhar ID cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X