Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் அரசு ஊழியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி.. தர்மபுரி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த உமாதேவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணமுறிவு ஏற்பட்டு, இரு குழந்தைகளும் கணவருடன் சென்று விட்டனர். அவர் 2வது திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் தொடர்ந்த வழக்கில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்களாக மகப்பேறு விடுப்பு இருந்தது. இந்த மகப்பேறு விடுப்பு கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 2வது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாதமாக இருந்த மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்துவதாகவும் அறிவித்தார்.

Supreme Court orders to grant maternity leave to female government employees to have 3rd child

இது தான் கடந்த 2021 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அதேநேரம் இந்த 9 மாத விடுமுறையை பிரசவத்திற்கு முன்பும் பின்பும் எத்தனை மாதங்கள் பிரித்து விடுப்பு எடுக்கலாம் என்பதை அந்தந்த பெண் ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அவ்வாறு மகப்பேறு விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு பதவி உயர்வின் போது அந்த விடுப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்தது. இதனால் பெண் ஊழியர்கள் பலர் சீனியாரிட்டி இருந்தும் பதவி உயர்வு இல்லாமல் இருந்தார்கள். எனவே இளம் பெண்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இனி மகப்பேறு விடுப்பும் பணிக்காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தற்போது 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது. அதேநேரம் மகப்பேறு விடுப்பை பொறுத்தவரை முதல் 2 குழந்தைகளுக்குத்தான் அரசு வழங்கி வருகிறது. 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சூப்பர் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த உமாதேவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு மணமுறிவு ஏற்பட்டது. இதனால் இரு குழந்தைகளும் கணவருடன் சென்று விட்டனர். இதற்கிடையே உமாதேவி வேறொருவரை திருமணம் செய்தார். 3-வது குழந்தை பெற மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மகப்பேறு விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தர்மபுரி ஆசிரியை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையிட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்தது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தர்மபுரி ஆசிரியை உமாதேவி சார்பில் வக்கீல் கே.வி.முத்துக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு குழந்தை பெறும் உரிமையின் அங்கம் எனக் குறிப்பிட்டு, இரு குழந்தைகளுக்கு மட்டுமே அரசின் கொள்கை பொருந்தும் என அரசு பள்ளி ஆசிரியைக்கு மூன்றாவது குழந்தை மகப்பேறு விடுப்பை மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+