டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசத்துரோக சட்டப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. வழக்கு பதிய கூடாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    தேச துரோக பிரிவின் கீழ் வழக்கு பதியக் கூடாது - உச்ச நீதிமன்றம்!

    ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே இந்த தேச துரோக சட்ட பிரிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கர்நாடகத்தை சேர்ந்த இவர் தாக்கல் செய்த மனுவில், தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மத்திய, மாநில அரசுகள் இதை தவறாக பயன்படுத்துகின்றன என்று கூறி இருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள்,சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பில் தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

    “காங்கிரஸ் நிலைப்பாடு இதான்.. ஆனா, நீதிமன்றம் சொல்லிட்டா ஆட்சேபனை இல்லை” கே.எஸ்.அழகிரி சொல்வது என்ன?“காங்கிரஸ் நிலைப்பாடு இதான்.. ஆனா, நீதிமன்றம் சொல்லிட்டா ஆட்சேபனை இல்லை” கே.எஸ்.அழகிரி சொல்வது என்ன?

    தேசத்துரோக சட்டம்

    தேசத்துரோக சட்டம்

    தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவு 152 வருடமாக அமலில் இருக்கும், ஆங்கிலேயே ஆட்சி காலத்து சட்டம் ஆகும். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே தொடர்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜர் ஆனார்.

    இதில் மத்திய அரசு வைத்த வாதத்தில், தேசதுரோக குற்றத்தை பெரும் குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளோம். சட்டத்தை ரத்து செய்ய முடியாது., இதில் உள்ள சட்ட பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய உள்ளோம். அதுவரை இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு வாதம் வைத்தது.

    கபில் சிபல்

    கபில் சிபல்

    இதையடுத்து கபில் சிபல் மனுதாரர் தரப்பில் வைத்த வாதத்தில், இச்சட்டத்தை மாற்றும் வரை ஏற்கனவே கைதானவர்கள் நிலை என்ன? அவர்கள் அது வரை சிறையில் இருக்க வேண்டுமா? சட்டத்தை மாற்றும் வரை இதே வழக்கில் பல்வேறு விசாரணைகளும், கைதுகள் நடந்து கொண்டு இருக்குமா? அதை எப்படி விசாரிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றம், தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றால், அதுவரையில் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது. இடைப்பட்ட காலத்தில் தேசதுரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும்.

    உச்ச நீதிமன்ற கேள்வி

    உச்ச நீதிமன்ற கேள்வி

    இது தொடர்பான பணிகளை 3-4 மாதத்தில் முடித்து வைக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி முடிவெடுக்க 1 நாள் அவகாசம் அளிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டது. இது தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இன்று விதித்த உத்தரவில், இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கும்வரை, சட்டத்தின் மறுபரிசீலனை செய்யும் வரை எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது.

     விசாரிக்க கூடாது

    விசாரிக்க கூடாது

    மத்திய, மாநில அரசுகள் இந்த சட்ட பிரிவை இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தாது என்று நம்புகிறோம். தேசத்துரோக வழக்கு பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை அதனை பயன்படுத்துவது சரியான விஷயமாக இருக்காது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை இச்சட்ட பிரிவின் கீழ் எந்தவிதமான வழக்குகளையும் பதிவு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

    பெயில் வழங்கலாம்

    பெயில் வழங்கலாம்

    அதேபோல் ஏற்கனவே தேசத்துரோக சட்டப் பிரிவில் போடப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்வதையும், நடவடிக்கை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் இந்த சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால், பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் நீதி மன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபர்கள் மீதான தேச துரோக வழக்கை உடனே ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    English summary
    Supreme Court put the Sedition law on hold in its historic order. தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்த்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X