ரூ.2,700 மருந்துக்கு ரூ.27,000 MRP.. கேன்சர் நோயாளிகளிடம் பகல் கொள்ளை! உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புற்றுநோய் மருந்துகளின் விலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடைகளுக்கு விற்கப்படும் விலைக்கும் மக்களுக்கு விற்கப்படும் விலைக்கும் இடையே இருக்கும் மிக பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் சில மருந்துகள் 10 மடங்கு அதிக விலைக்கு கூட விற்கப்படுவதாகவும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை பகல் கொள்ளை என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியா தான் முக்கியமான மருந்து உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி பல வளர்ந்த நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்தே பல்வேறு மருந்துகள் செல்கின்றன. அதேநேரம் இந்தியாவிலும் கூட விற்பனை செய்யப்படும் சில மருந்துகள் விலை மிக அதிகமாக இருப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

Supreme Court Cancer Medicines 10-Fold Price Gap India

மருந்து விலை

குறிப்பாக கேன்சர் உள்ளிட்ட நோய்கள், உயிரை காக்கும் மருந்துகளுக்கான விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டு மருந்துகளின் விலையை அதிகமாக நிர்ணயிப்பதாக டாக்டர் சஞ்சய் குல்ஷ்ரேஷ்டா குற்றம்சாட்டியுள்ளார்.

10 மடங்கு அதிகம்

வழக்கு விசாரணையின் போது, கடைகளில் மிக அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சுமார் 10 மடங்கு வரை மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குறிப்பிட்டனர். உதாரணமாக கடைக்காரர்களுக்கு சுமார் ரூ.2,700க்கு விற்கப்படும் புற்றுநோய் மருந்தின் MRP ரூ.27,000 ஆக அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது கடைக்காரக்களுக்கு விற்கப்படும் விலையை காட்டிலும் சுமார் 10 மடங்கு அதிக விலை அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இவ்வளவு பெரிய விலை வேறுபாடு எப்படி ஏற்படுகிறது என்றும் மருந்து நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பனையாளருக்கு அவற்றை வழங்கும்போது, ஏன் அதைவிட பல மடங்கு அதிகமான MRP பாக்கெட்டில் குறிப்பிடப்படுகிறது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விலை வேறுபாடு தீவிரமான பிரச்சினை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்வதில் இது போன்ற மிக பெரிய இடைவெளி இருப்பது நோயாளிகளுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

பகல் கொள்ளை

நீதிபதிகள் மேலும், "இது நோயாளிகளைச் சுரண்டும் செயலாகவும், பகல் கொள்ளையாகவும் உள்ளது. ரூ.2,700-க்கு நிறுவனங்கள் செய்யும் மருந்தின் பாக்கெட்டில் எப்படி ரூ.27,000 MRP அச்சிட முடியும்?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக இருப்பது குறித்தும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

PTR என்றால் என்ன?

PTR என்பது டீலர்கள் மருந்தை சில்லறை கடைகள், அதாவது மருந்தகங்களுக்கு விற்பனை செய்யும் விலையாகும். பொதுவாக மருந்துகள் எப்போதும் நிறுவனங்களிடம் இருந்து முதலில் டீலர்களுக்கு செல்லும். அவர்கள் மூலமாகவே மருந்தகங்களுக்கு சென்றடைகிறது. இதுதான் பிராசஸ்.

MRP எதற்காக?

அடுத்து தான் வருகிறது MRP- அதாவது Maximum Retail Price. ஒரு பேக்கில் இருக்கும் மருந்தை மக்களுக்கு அதிகபட்சமாக எந்த விலைக்கு விற்பனை செய்யலாம் என்பதை இது குறிக்கும். இந்த விலை தான் பொதுவாக மருந்து பேக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கும். இந்த PTRக்கும் MRPக்கும் இடையேயான வேறுபாடே 10 மடங்கிற்கும் அதிகமாக இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மக்களிடம் அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க மத்திய NPPA அமைப்பு சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யும். கேன்சர் சார்ந்த மருந்துகளில் 131 மருந்துகளுக்கு மட்டுமே உச்சவரம்பு உள்ளது. பல புதிய வகை மருந்துகளுக்கு உச்சவரம்பு எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதுபோல அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+