பீகார் தேர்தலுக்கு முன் திடீர் வாக்காளர் சரிபார்ப்பு ஏன்? சுப்ரீம் கோர்ட் கேட்ட 3 முக்கியமான கேள்விகள்
டெல்லி: பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குத் தேர்தல் ஆணையம் சிறப்புத் திருத்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்தது. அதேநேரம் தேர்தலுக்குச் சில மாதங்கள் இருக்கும்போது இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
பீகாரில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இப்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துவிட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் அங்குச் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (special intensive revision -SIR) மேற்கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
தேர்தலுக்குச் சில மாதங்கள் இருக்கும் போது ஏன் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
டைமிங் தான் பிரச்சனை
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (SIR) தேர்தலுடன் இணைத்ததற்காகத் தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் லாஜிக்கும் நடைமுறைத்தன்மையும் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பிரச்சனை இல்லை, அதன் டைமிங் தான் பிரச்சனை... பீகாரில் SIR நடவடிக்கையைச் சட்டமன்றத் தேர்தல்களுடன் ஏன் இணைக்கிறீர்கள்? தேர்தல்கள் இல்லாமலும் அதைச் செய்யலாமே?" என்று கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் நீதிமன்றங்கள் அதைத் தொடாது... அதாவது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நபர், திருத்தப்பட்ட பட்டியல் குறித்துத் தேர்தலுக்கு முன்பு கேள்வி வாய்ப்பை இழப்பார்" என்றனர். இருப்பினும், குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதில் தவறில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
மூன்று முக்கியமான கேள்விகள்
மேலும் நீதிபதிகள், "தேர்தல் ஆணையம் செய்வது அரசியலமைப்பின் கீழ் உள்ள ஒரு நடவடிக்கை. அதில் ஒரு நடைமுறை தன்மை உள்ளது. கணினிமயமாக்கலுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்பதால் ஒரு தேதியை நிர்ணயித்தனர். எனவே அதில் ஒரு லாஜிக் இருக்கிறது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்பினர்.
- SIR நடவடிக்கையை மேற்கொள்ளக் குழுவுக்கு இருக்கும் அதிகாரம் என்ன என்பதை விளக்க வேண்டும்.
- ஆய்வு நடைமுறையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
- தேர்தலுக்குச் சற்று முன்பு இந்த நடவடிக்கைக்கான காரணம் என்ன என்பதையும் தெளிவாக விளக்க வேண்டும்.
ஆதார் ஏற்பதில்லை
மேலும், இப்போது நாடு முழுக்க பரவலாக கிட்டதட்ட அனைத்து நடைமுறைகளுக்கும் ஆதார் ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.. ஆனால், தேர்தல் ஆணையம் அதை ஏற்க முடியாது என மறுப்பதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். மேலும், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதிடுகையில், "நாங்கள் குடிமக்களா இல்லையா என்று சொல்ல அவர்கள் யார்? இந்தப் பொறுப்பு அவர்கள் மீதுதான் உள்ளது, எங்கள் மீது இல்லை. நான் குடிமகன் இல்லை என்று சொல்வதற்கு அவர்களிடம் தான் ஆதாரங்கள் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
ஆதார் அட்டையை ஆவணங்களின் பட்டியலில் இருந்து விலக்கியது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், "ஆதாரை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது" என்றார். இருப்பினும் இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், "குடியுரிமை பிரச்சனையை பீகார் தேர்தல் விவகாரத்தில் ஏன் கொண்டு வருகிறீர்கள்?. குடியுரிமை என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவது. இந்தப் பிரச்சினை தேர்தல் தொடர்பானது. வெவ்வேறு அதிகார வரம்புக்குள் வரக்கூடிய இவை இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்" என்றனர்.
இருப்பினும், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கு முன்பு நீதிமன்றம் அதைப் பார்வையிடலாம் என்றும், இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications