"சட்டம் தன் கடமையை செய்யும்!" அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரம் குதிரை பேரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை மீது விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்தது. அப்போது சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அதிமுகவில் இருந்து விலகி 6 எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியமாகினர். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

Supreme Court

நீதிபதி வழக்கு

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைவது வழக்கமாகிவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் உள்ள கட்சி தாவல் தடை சட்டத்தில் சட்டரீதியான வெற்றிடம் உருவாகியுள்ளது. தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, சில எம்எல்ஏக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 190(3)(b) பிரிவின்படி திட்டமிட்டு ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் அரசில் அமைச்சர் பதவிகளை பெறுகிறார்கள்" என்றார்.

வழக்குப்பதிவு

மேலும், கட்சி மாறிய விவகாரத்தில் குதிரை பேரம் மற்றும் பண ஆதாயங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. ராஜினாமாக்களை தனித்து பார்க்கக் கூடாது என்றும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சட்டம் தனது கடமையை செய்யும்

ஆனால், அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ் இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நீதிமன்றத்தின் அரசியலமைப்பு நிவாரணங்களுக்கும், குற்றவியல் விசாரணைக்கும் இடையே வேறுபாடு இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அப்போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, "எஃப்ஐஆர் தொடர்பாக விசாரணை நடைபெறட்டும். சட்டம் தனது கடமையை செய்யும்" என்று தெரிவித்தார். இதையடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னணி

இந்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. அதேநேரம் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்களை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற சபாநாயகருக்கு உத்தரவிட்டிருந்தது. அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் விரைவாக ஏற்றதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதற்கு முன்பு விஜய் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+