கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு:- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
டெல்லி: கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; மத்திய அரசு தரும் ராயல்டி என்பது வேறு; மாநிலங்கள் விதிக்க அதிகாரம் உள்ள வரி என்பது வேறு என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அதிரடித் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்த இந்த வழக்கில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நாகரத்தினா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க முடியுமா? இல்லையா? என்பது தொடர்பான வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. 1989-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டும் உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. அதாவது 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது; ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்தது அத்தீர்ப்பு.

இந்த நிலையில் கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க உரிமை இல்லை என உத்தரவிடக் கோரி கனிம நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பாக 80-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2011-ம் ஆண்டு இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.
கனிம வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை 9 நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தி வந்தது. இந்த விசாரணைகளின் போது, கனிம வளங்களுக்காக மத்திய அரசு தரும் ராயலடிதான் வரி; ஆகையால் மாநில அரசு தனியாக வரி விதிக்க முடியாது என கனிம வள நிறுவனங்கள் வாதிட்டன. மத்திய அரசு தரப்பிலோ, கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிக்க தொடங்கிவிட்டால் அவற்றின் விலை மிக கடுமையாக உயர்ந்து விடும்; மாநில அரசுகளுக்கு அப்படியான அதிகாரமே இல்லை என வாதிட்டது.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகளில் 8 பேர், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தனர். கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது; கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு. நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். நீதிபதி நாகரத்தினா மட்டும் மாறுபட்ட தீர்ப்பளித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications