"அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது.." கரப்பான் கட்சி போராட்டம்.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டங்களில் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிற தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சியினர் நேற்று போராட்டங்களை அறிவித்திருந்தனர். இருப்பினும், போராட்டம் தொடங்கும் முன்பே கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Supreme Court Jantar Mantar Protest Cockroach Janata Party

அவசர விசாரணை

இதற்கிடையே சனிக்கிழமை போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விசாரணை நடத்தியது. போராட்ட இடமான ஜந்தர் மந்தருக்கு செல்வதை தடுக்கும் கட்டுப்பாடுகள், ரயில் சேவை முடக்கம், 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது உள்ளிட்டவை மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டன.

இதற்கிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சட்டம் அனுமதிக்கும் நடைமுறைகளை பின்பற்றியே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. பிஎன்எஸ் 163வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளில் அமைதியாக கூடும் மக்களை சட்டவிரோதமாக தடுப்பு காவலில் கைது செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டது.

பொது அமைதி

பொது அமைதியை பாதுகாக்க அவசியமான சூழல் ஏற்பட்டாலே தவிர, மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்படி தேவையான கட்டுப்பாடுகளை தவிர்த்து, இணைய சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், மக்களின் நடமாட்டத்துக்கும் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

போராட்டங்களின்போது பொது போக்குவரத்து கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் மீறப்பட்டதாக மனுதாரர் புகாரளித்தார். இது தொடர்பாக உரிய விளக்கமளிக்க மத்திய உள்துறை செயலர், டெல்லி காவல் ஆணையர், டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.. உச்ச நீதிமன்ற வளாகத்தை சுற்றி 163வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்தும் அகற்றவும் உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வதை தடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தது.

உத்தரவு

முன்னதாக வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மக்கள் டெல்லிக்கு வருவதையும் போராட்டத்தில் பங்கேற்பதையும் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியது. மேலும், எந்தெந்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற விவரத்தை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சனிக்கிழமை இரவு 10 மணிக்குள் அனைத்து மெட்ரோ நிலையங்களும் திறக்கப்பட்டதாகவும், இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யக்கூடாது

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத தடுப்பு காவல், போலீசாரின் அத்துமீறல், வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட புகார்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்குகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+