எல்லாவற்றுக்கும் மத சாயம் பூசுவதா.. சில மீடியாக்களால் நாட்டுக்கு கெட்ட பெயர்- உச்சநீதிமன்றம் ஆதங்கம்
டெல்லி: சில மீடியாக்கள் அனைத்து விஷயங்களையும் மதத்தோடு தொடர்புபடுத்தி செய்திகளாக வெளியிடுவதால் நாட்டுக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஆகியவற்றை இணைத்து சில ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பியது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள், அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒருசில மீடியாக்களால் இந்த நாட்டில் நடைபெறும் அனைத்து விஷயங்களும் மதத்தோடு தொடர்பு படுத்தி செய்தியாக வெளியிடப்படுகிறது. அதுதான் மிகப்பெரிய பிரச்சனை. இறுதியாக இந்த நாட்டுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

சமூக வலைத்தள பக்கங்கள்
சமூக வலைத்தள பக்கங்களுக்கு எந்த ஒரு பொறுப்புணர்வும் கிடையாது. ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றுக்கும் எந்த ஒரு பொறுப்புணர்வும் கிடையாது. தனிநபர்களை கூட விட்டுவிடுங்கள் நிறுவன அமைப்புகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவது பற்றி புகார்கள் எழுப்பப்பட்டால் கூட அவை அதை கண்டுகொள்வது கிடையாது. யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தான் மக்களாக தருகின்றன இந்த சமூக வலைத்தள நிர்வாகங்கள்.

தகவல் தொழில்நுட்ப சட்டம்
சமூக வலைத்தள பக்கங்களில் கட்டுப்பாடு கொண்டு செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தபோது.. மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021 பற்றி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

புகார்கள் மீது நடவடிக்கை
இந்த சட்டத்தின்படி புகார்கள் மீது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமூகவலைத்தள நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்த பட்டிருப்பதை அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் புகார்களை பெறும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று இந்த சட்டத்தின் வரையறை செய்யப்பட்டிருக்கிறது என்பதை துஷார் மேத்தா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

ஒரே வழக்கு
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-க்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் ஒரே வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்ததை அப்போது அவர் நினைவுகூர்ந்தார்.












Click it and Unblock the Notifications