SIR பஞ்சாயத்து! உச்சநீதிமன்றத்திற்கு புது நெருக்கடி! என்ன பதில் சொல்லப்போகிறார்கள் நீதிபதிகள்?
டெல்லி: SIR தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு ஏமாற்றிதான் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், உத்தரவை நீதிமன்றம் தானாக முன்வந்து வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கவுடா வலியுறுத்தியுள்ளார்.
பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே இதை எதிர்த்து ADR போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தன.

அப்போது தேர்தல் ஆணையத்தின் வாதங்களை நீதிமன்றம் கேட்டது. "நாங்க மொத்தம் மூனு பேர். தலைமை ஆணையர், ரெண்டு ஆணையர்கள். இவர்களின் முழு ஒப்புதலோடு SIR குறித்து முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிற சாராம்சத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்.. அப்புறம் என்னப்பா எல்லாம் ஓகேதானே! "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலை துல்லியமாக வைத்திருப்பது அவசியம். எனவே SIR பணிகளை மேற்கொள்ள ஆணையத்திற்கு முழு அதிகாரம் உண்டு" என்று தீர்ப்பளித்தது.
விஷயம் என்னவெனில், ஆணையத்தில் இருக்கும் ரெண்டு ஆணையர்கள்.. SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு பகீர் கிளப்பியிருந்தது. அப்படியெனில், ஆணையம் ஒருமனதாக முடிவெடுத்ததாக நீதிமன்றத்தில் பொய் சொல்லி.. SIRக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது என்று பாயிண்ட்டை பிடித்து முன்னாள் நீதிபதி கோபால கவுடா சுட்டிக்காட்டினார்.
இத்துடன் அவர் நின்றுவிடவில்லை. பொய் சொல்லிதானே அனுமதி வாங்கினார்கள்.. எனவே உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து SIRக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது லாஜிக்கான டிமாண்ட்தான். நியாயமான தேர்தல் பற்றி பேசிய உச்சநீதிமன்றம்.. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
